விடுதலை சந்தா சேர்ப்பில் தீவிரம் காட்டுவோம் கும்மிடிப்பூண்டி, ஆவடி, வடசென்னை, தென்சென்னை கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடலில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 20, 2022

விடுதலை சந்தா சேர்ப்பில் தீவிரம் காட்டுவோம் கும்மிடிப்பூண்டி, ஆவடி, வடசென்னை, தென்சென்னை கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்

சென்னை, அக். 20-- கும்மிடிப்பூண்டி, ஆவடி,  வடசென்னை,  தென் சென்னை ஆகிய நான்கு மாவட் டங்களின்  கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடலில் தந்தை பெரியார் பிறந்த நாள் - ‘ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை‘ நூல் அறிமுகம் - விழாக்களை சிறப்பாக நடத் துவதோடு ‘விடுதலை‘ சந்தா சேர்ப்புப் பணியில் தீவிரம் காட்டி - சந்தாக்களை தமிழர் தலைவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் பரி சாக வழங்குவதென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது: விவரம் வருமாறு:

கும்மிடிப்பூண்டி

கும்மிடிப்பூண்டி மாவட்டப் பொறுப்பாளர்கள் கலந்துரையா டல் கூட்டம் 15 .10. 2022 அன்று காலை 10 மணிக்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் புழல் ஆனந்தன் தலைமையில்பொன் னேரியில் உற்சாகமாக நடைபெற் றது .

மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா. குணசேகரன் கூட்டத் தின் நோக்கத்தை விளக்கி உரை யாற்றினார்

மாநில அமைப்புச் செயலா ளர்கள் வி.பன்னீர்செல்வம்,  ஊமை.செயராமன் மண்டல செய லாளர் தே.செ. கோபால் ஆகியோர் வழிகாட்டுதல்,  திட்டமிடல் தொடர்பாக சிறப்புரை வழங்கினர்.

 மேனாள் மாவட்ட செயலாளர் ரமேஷ்.  பொன்னேரி நகரத் தலை வர் வே. அருள்,  நகர செயலாளர் சுதாகர், ஒன்றிய செயலாளர் முருகன், புழல் ஒன்றிய செயலா ளர்மு. உதயகுமார், புழல் நகரத் தலைவர் இரா.சோமு ,மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் இரா.அசோக், எல்லாபுரம் ஒன்றிய செயலாளர் அருணகிரி, மருத்துவர் உதயகுமார்,  மாவட்ட மகளிரணி தலைவர் ராணி, ஆசிரியர் செல்வி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் தீர்மானங்களை நிறைவேற்ற உறுதி பூண்டனர். தமிழர் தலைவர் அவர்களின் 90ஆவது பிறந்த நாள் பரிசாக பொன்னேரி, கும்மிடிப் பூண்டி, மாதவரம், சட்டமன்றத் தொகுதியில் விடுதலை சந்தாக்கள் சேர்த்தளிப்பது என தீர்மானிக்கப் பட்டது. 

ஆவடி

ஆவடி மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையா டல் கூட்டம் மதியம் 2 மணிக்கு கொரட்டூர் பகுத் தறிவுப் பாசறையில் மாவட்டத் தலைவர் பா.தென்னரசு தலை மையில் மகிழ்ச்சி பொங்க நடை பெற்றது.

மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் கூட்டத் தின் நோக்கத்தை விளக்கி உரை யாற்றினார்.  பொறுப்பாளர்களின் கடமை,  திட்டமிடல் ஆகியவற்றை விளக்கி மாநில அமைப்புச் செயலா ளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை. செயராமன்,   மண்டல செயலாளர் தே.செ.கோபால் ஆகி யோர் உரையாற்றினர். மாவட்டச் செயலாளர் இளவரசன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.ஏழு மலை,  பூந்தமல்லி பகுதி தலைவர் க. தமிழ்ச்செல்வன்,  ஆவடி பகுதி தலைவர் ச.இரணியன், மதுரவாயல் இளைஞரணி தலைவர் தங்க.சர வணன்,  முகப்பேர் பகுதி தலைவர்தி. முரளி,  மாவட்ட இளைஞரணி தலைவர் வெ.கார்வேந்தன், மாவட்ட இளைஞரணி செயலா ளர் வி. சோபன்பாபு, ஆவடி நகர செயலாளர் ஆடிட்டர் தமிழ்மணி,  ஆவடி வை.கலையரசன், கார்த்தி கேயன்  பகுத்தறிவுப்பாசறை இரா. கோபால் உள்ளிட்ட பொறுப் பாளர்கள் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களை செயலாக்குவோம்  என கருத்துரை வழங்கினர். மதுர வாயல்,  ஆவடி,  அம்பத்தூர்,  பூந்த மல்லி  ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் விடுதலை சந்தாக் கள் சேர்த்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 90ஆவது பிறந்த நாள் பரிசாக வழங்குவதென  தீர்மானிக்கப்பட்டது.

வடசென்னை

வடசென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம் மாலை 4.30 மணிக்கு எண்ணூர் அன்னை சிவகாமி நகரில் மாவட் டத் தலைவர் வெ.மு.மோகன் இல்லத்தில் நடைபெற்றது. 

மாநில அமைப்பாளர் உரத்த நாடு இரா.குணசேகரன் கூட்டத் தின் நோக்கத்தை விளக்கி உரை யாற்றினார்.

மாநில அமைப்புச் செயலாளர் கள் வி.பன்னீர்செல்வம், ஊமை. செயராமன்,  மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேஷ் மண்டல செயலாளர் தே.செ. கோபால் ஆகியோர் வழிகாட்டுதல் உரை வழங்கினர்.

மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன்புச் செல்வன்,  மாவட்ட துணைத்தலைவர் கி.இராமலிங்கம், ந.இராசேந்திரன், இராமச்சந்திரன் இளைஞரணி தலைவர் இரா.சதீசு, திருவொற் றியூர் பெ.செல்வராசு வி.தென்ன ரசி ஆகியோர் கருத்துரை வழங்கி னர். திருவொற்றியூர்,  ஆர்.கே.நகர், ராயபுரம், கொளத்தூர்,  துறை முகம்,  திருவிக நகர்,  அண்ணாநகர்,  ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில்  உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு சந்தாக்கள் திரட்டி தமிழர் தலைவர் அவர்களிடம் 90ஆவது பிறந்தநாள் பரிசாக வழங்குவது என தீர்மானிக்கப் பட்டது.

தென்சென்னை

தென்சென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்து ரையாடல் கூட்டம் இரவு 7 மணிக்கு மாவட்ட அமைப்பாளர் சைதாப் பேட்டை மு.ந.மதியழகன் இல்லத்தில் நடை பெற்றது. மாவட்ட கழகத் தலைவர் இரா.வில்வநாதன் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் உரத்தநாடு. இரா.குணசேகரன் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கி உரையாற்றினார். மாநில அமைப் புச்செயலாளர்கள் வி.பன்னீர் செல்வம், ஊமை.செயராமன், மண் டல செயலாளர் தே.செ.கோபால்  ஆகியோர் வழிகாட்டுதல் உரை வழங்கினர். 

மாவட்டச்செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, மாவட்ட துணைத் தலைவர்கள் டி.ஆர்.சேது ராமன்,  கோவி.இராகவன், மாவட் டத் துணைச் செயலாளர்  அரும் பாக்கம் சா.தாமோதரன், மாவட்ட இளைஞரணி தலைவர் ச.மகேந் திரன், மாவட்டஇளைஞரணி செயலாளர் ந.மணிதுரை, திரு வல்லிக்கேனி அப்துல்லா, மத்தூர் நிலவன், ஆகியோர் தீர்மானங் களை சிறப்பாக நிறைவேற்றுவோம் என உறுதிகூறினர். 

அனைத்துக் கூட்டங்களிலும் கீழ்க்கண்ட வகையில் மூன்று தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

8.10.2022அன்று சென்னையில் தமிழர்தலைவர் தலைமையில் நடைபெற்ற செயற்குழுவின் தீர் மானங்களை செயல்படுத்துவது எனவும்,  பகுத்தறிவுப்பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா, "ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோ ஜன் குதிரை" நூல் அறிமுகவிழா நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்து வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

No comments:

Post a Comment