செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 7, 2022

செய்திச் சுருக்கம்

மானியம்

மண்ணில்லா சாகுபடி, செங்குத்து தோட்டம் அமைக்க ரூ.15 ஆயிரம் மானியத்துக்கு ஆர்வமுள்ள பொதுமக்கள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.

பயணம்

தமிழ்நாட்டில் அக்டோபர் 5ஆம் தேதி வரை 176 கோடியே 84 லட்சம் மகளிர் அரசு பேருந்தில் கட்டண மில்லாமல் பயணம் செய்துள்ளனர் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்.

அரசாணை

தமிழ்நாட்டில் 2,381 அங்கன்வாடி மய்யங்களில் எல்கேஜி, மற்றும் யுகேஜி வகுப்புகள் 2022-2023ஆம் கல்வி ஆண்டிலும் தொடர்ந்து செயல்பட பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

உத்தரவு

ஓராண்டுக்கான படிப்பில் 10 மாதங்கள் பூர்த்தி செய்த பிறகே தேர்வெழுதும் திட்டத்தை கொண்டு வர தமிழ்நாடு அரசின் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மழை

வடகிழக்குப் பருவ-மழை அக்டோபர் 4ஆவது வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்.

நியமனம்

தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை கண்காணிக்க தனி அதிகாரி கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தேர்வு

தமிழ்நாட்டில் அனைத்து வகை பள்ளிகளிலும் பிளஸ் 1 - வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு தமிழ்மொழி இலக் கியத் திறனறிவுத் தேர்வு வரும் 15ஆம் தேதி நடைபெறும்.

குறுந்தகவல்

மின்சார வாரியம் அறிவித்துள்ள புதிய மின் கட்டண விகிதம் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், அடுக்குமாடி குடியிருப்பு நுகர்வோர் உள்ளிட்டோருக்கு அது தொடர் பான குறுந் தகவல்களை தமிழ்நாடு மின்சார வாரியம் அனுப்பி வருகிறது.

முதியோர்

முதியோருக்கான நலத்திட்ட உதவிகள் தொடர்பான விவரங்களை சமர்பிக்குமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு.

விரைவில்

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் மாநில மொழிகளில் எழுதப்படும் நில ஆவணங்களை ஆங்கிலம் மற்றும் 22 மாநில மொழிகளில் மொழி மாற்றம் செய்யும் புதிய திட்டத்தை ஒன்றிய அரசு விரைவில் அமல்படுத்தவுள்ளது.


No comments:

Post a Comment