தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளில் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 22, 2022

தமிழர் தலைவர் ஆசிரியரின் 90 ஆம் ஆண்டு பிறந்த நாளில்

‘விடுதலை' சந்தாக்களை பிறந்த நாள் பரிசாக வழங்க தாம்பரம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

தாம்பரம், அக்.22 தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 19.10.2022 ஆம் தேதி மாலை 3 மணியளவில் தாம்பரம் பகுத்தறிவு கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் ப.முத்தையன் தலைமை ஏற்றார், மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன்  வரவேற்பு உரை ஆற்றினர். பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் நா.கரிகாலன் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் துணைத் தலைவர் பி.அருணா, கழக மாநில அமைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன்  மதவாத அமைப்புகள் குறித்தும் அது ஏற்படுத்தும் அபாயத்தை தடுக்க இருக்கக் கூடிய ஒரே நாளிதழ் விடுதலை என்பதும் அதை அனைவரும் வாங்கிப் படித்தால் மட்டுமே நாட்டில் ஏற்படும் குழப்பங்கள், பிரச்சி னைகள் குறிப்பாக தமிழ்நாட்டில் பா.ஜ. கட்சி ஏற்படுத்தும் இந்துத்துவா கொள்கைகளை பொய், பித்தலாட்டங்களை மற்றும் மக்களை திசை திரும்பும் வேலைகளை முறியடித்து தமிழ்நாட்டையும் நாட்டு மக்களையும் தற்காத்துக் கொள்ள முடியும் என்பதை விளக்கி சிறப்புரையாற்றினார்.

மாநில அமைப்புச் செயலாளர் பன்னீர்செல்வம்   கருத் துரையாற்றி சிறப்பித்தார். இறுதியாக கழக மாநில அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன்  ‘விடுதலை' சந்தா பற்றியும்  மிகத் தெளிவாக எடுத்துரைத்தார்.

மாவட்ட மகளிர் அணி தோழர்கள் அ.பா.நிர்மலா, இரா.சு.உத்ரா, ந.சாரதா, சகுந்தலா,கபடி வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் நா.இராமகிருட்டினன், கு.வைத்திய லிங்கம், தாம்பரம் நகர தலைவர் சீ.லட்சுமிபதி, கூடுவாஞ்சேரி நகர தலைவர் மு.தினேஷ்குமார் சி.சட்டநாதன், மாடம்பாக்கம் அ.கருப்பையா,கரசங்கால் கதிர்வேல், படப்பை செ.சந்திர சேகரன், முரளி, இ.தனசேகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட  தீர்மானங்கள்:-

தீர்மானம் 1:

8.10.2022 அன்று நடைபெற்ற தலைமைச் செயற்குழுவின் முடிவுகளை செயல்படுத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 2:

ஆர்.எஸ்.எஸ். எனும்"டிரோஜன் குதிரை"எனும் நூலில் அறிமுக விழா,பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகளை எழுச்சியோடு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தீர்மானம் 3:

தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஒரு பகுதி, திருபெரும்புதூர் தொகுதியின் ஒரு பகுதி ஆகிய சட்ட மன்ற தொகுதிகளில் "உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழான ‘விடுதலை' சந்தாக்களை சேர்த்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் 90 ஆவது பிறந்தநாள் பரிசாக வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது என முக்கிய மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தின் முடிவில் தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ்  நன்றி கூறினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தோழர்கள் ‘விடுதலை' ஆயுள் சந்தா வழங்குவதாக அறிவித்தனர்.

மாநில பகுத்தறிவாளர் கழகத் துணைத்தலைவர் 

கரிகாலன் -2 

மாவட்டச்செயலாளர் கோ.நாத்திகன்-2

தாம்பரம் நகரத்தலைவர் லட்சுமிபதி-1

நகரசெயலாளர் -1

படப்பை சந்திரசேகரன் -1

படப்பை கருப்பையா-1

கரசங்கால் கதிர்வேல்-1

கூடுவாஞ்சேரி தினேசுகுமார்-1

கூடுவாஞ்சேரி இராசு-1

கபாடிவீரர் நெடுவை கு.வைத்தியலிங்கம்-1 ஆகியோர் தங்களது சார்பில் வாழ்நாள் விடுதலை சந்தா வழங்குவதாக அறிவித்து மகிழ்ந்தார்கள்.

கூட்ட முடிவில் தோழர்கள் குழுப்படம் எடுத்து மகிழ்ந்தனர். கூட்டம் மிக சிறப்பாக நடந்தது.

No comments:

Post a Comment