பனை மரம் ஏற சிறந்த கருவியை கண்டுபிடிப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

பனை மரம் ஏற சிறந்த கருவியை கண்டுபிடிப்பவருக்கு ரூ.1 லட்சம் பரிசு: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை, அக். 13- பனைமரம் ஏறும் பணியில் ஈடுபட்டுள்ள தொழி லாளர்களின் இன்னலைக் குறைக்கும் வகையில், எவ்வித ஆபத்துமில்லாமல், எளிதாக பனைமரம் ஏறுவதற்கு சிறந்த கருவியினைக் கண்டுபிடிக்கும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் விருது வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து வேளாண்மை உற்பத்தி ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நமது மாநில மரமான பனை மரத்தின் சாகுபடியை ஊக்கு வித்து, பனைமரங்களை நம்பி வாழும் வேளாண் பெருமக்கள் மற்றும் தொழிலாளர்களின் நல னைப் பாதுகாப்பதற்கு, தமிழ் நாடு அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது.

2021-2022ஆம் ஆண்டில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், 76 லட்சம் பனை விதைகளும், ஒரு லட்சம் பனங்கன்றுகளும் முழு மானியத்தில் விநியோகம், பனைப்பொருட்களை மதிப்புக் கூட்டுவதற்கான நவீன எந்திரங் கள் விநியோகம், அரசு நியாய விலைக்கடைகளில் பனைவெல் லம் விற்பனை, பனைமரங்களில் ஆராய்ச்சி என பல்வேறு பணி களுக்காக அரசு நடவடிக்கை எடுத்தது.

நடப்பு 2022--2023ஆம் ஆண் டிலும், பனை மேம்பாட்டு இயக் கத்தின்கீழ், தோட்டக்கலை மற் றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் 10 லட்சம் பனை விதை களை விநியோகம் செய்வதற்கும், பனையேறும் சிறந்த எந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கு விருதளிப் பதற்கும் 50 சதவிகித மானியத்தில் மதிப்புக் கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்கும், 50 சதவிகித மானியத்தில் மதிப்புக் கூட்டப் பட்ட பனைபொருட்கள் தயா ரிப்பதற்கான உபகரணங்கள் வழங்குவதற்கும், பனை ஏறும் விவசாயிகளுக்கு 75 சதவிகித மானியத்தில் கருவிகள் வழங்குவ தற்கும் தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் மூலம் தரமான பனைவெல்லம், பனங் கற்கண்டு தயாரிப்பு தொடர்பாக 250 பனைவிவசாயிகளுக்கு பயிற்சிஅளிப்பதற்கும், இப்பயிற் சியினைப் பெற்ற விவசாயிக ளுக்கு 50விழுக்காடு மானியத்தில் உபகரணங்கள் விநியோகிப்ப தற்கும் பனையோலைப் பொருட் கள் தயாரிப்பது தொடர்பாக 100 பெண்களுக்குப் பயிற்சி வழங்குவதற்கும் மாநில அரசு ரூ.2.02 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, பனைமரம் ஏறும் பணியில் ஈடு பட்டுள்ள தொழிலாளர்களின் இன்னலைக் குறைக்கும் வகை யில், இத்திட்டத்தின் சிறப்பம் சமாக, எவ்வித ஆபத்துமில்லா மல், எளிதாக பனைமரம் ஏறுவ தற்கு சிறந்த கருவியினைக் கண்டு பிடிக்கும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் விருது வழங்கப்பட உள்ளது.

இந்தப் போட்டியில், பல் கலைக் கழகங்கள், தனியார் நிறு வனங்கள், முன்னோடி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொள்ளலாம். பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியை கண்டுபிடிப்பவரைத் தேர்ந்தெ டுப்பதற்காக, அரசு தேர்வுக்குழு ஒன்றினை அமைத்துள்ளது. இக்குழுவில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து தோட்டக் கலைத்துறையின் பேராசிரியர், வேளாண் பொறியியல் துறையின் பேராசிரியர், தோட்டக்கலை கூடுதல் இயக் குநர், தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் அலுவலர் மற்றும் பனைசார்ந்த தொழிலில் சிறந்து விளங்கும் முன்னோடி விவசாயி ஆகியோர் உறுப்பினர் களாகச் செயல்படுவார்கள்.

இத்தகைய கருவியினைக் கண்டுபிடிப்பதற்கு ஆகும் மொத்த செலவினம், கருவியின் செயல்திறன், இதற்கான விலை யின் உண்மைத்தன்மை, இயந் திரத்தின் ஒட்டு மொத்த பயன் பாட்டுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கான நபர் தேர்வு செய்யப்படுவார்.

இந்தவிருதுக்கான போட்டி யில் கலந்து கொள்ள விரும்பும் நிறுவனங்களும், தனிப்பட்ட நபர்களும் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார் கள். பனை மரத்தொழிலாளர் களின் நலனில் அதிக அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அர சின் இத்தகைய நடவடிக்கையின் மூலம் பனைமரம் ஏறுவதற்கு எளிதான கருவி விரைவில் கண்டுபிடிக்கப்பட்டு, நமது மாநிலத்தில் அறிமுகப்படுத்தப் படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

-இவ்வாறு வேளாண்மை உற் பத்தி ஆணையர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment