சென்னை, அக். 13- சென்னை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மய்யம் சார்பில், சென்னை இராயப்பேட்டையி லுள்ள புதுக்கல்லூரியில் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்வரும் 15.10.2022 அன்று நடை பெறுகிறது.
இதுகுறித்து வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் கோ.வீர ராகவராவ் வெளியிட்ட அறிவிப்பு வருமாறு,
சென்னை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட் டும் மய்யம் சார்பில் மாபெரும் தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம், அக்.15ஆம்தேதி ராயப்பேட்டை புது கல் லூரியில் நடைபெற உள் ளது. இம்முகாமில் 300-க் கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங் களால் 40,000-க்கும் மேற் பட்ட காலிப் பணியிடங் கள் பூர்த்தி செய்யப்பட உள்ளன.
இம்முகாமில் 8ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்களும், அய்டி அய், டிப்ளமோ, நர்சிங், பார்மசி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர் களும் பங்கேற்கலாம். மேலும், இம்முகாமில் சிறப்பு நேர்வாக பணியில் இருந்து ஓய்வு பெற்றவர் களுக்கும் மாற்றுத் திற னாளிகளுக்கும் வேலை வாய்ப்பு அளிக்கும் நோக்கில் பல தனியார் வேலையளிக்கும் நிறுவ னங்கள் பங்கேற்று காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளன. இம்முகாமில் கலந்துகொள்ள வரும் தகுதி படைத்த அனைவ ரும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்,கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டைஆகியவற்றின் நகல்கள் மற்றும் சுய விவ ரக் குறிப்புடன் நேரில் வருகைப்புரிந்து தங்க ளுக்கு தகுதியான வேலை வாய்ப்பை பெற்று பயன டைலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment