பிஜேபி ஒன்றிய அரசின் சா(வே)தனை இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 விழுக்காடாக வீழும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

பிஜேபி ஒன்றிய அரசின் சா(வே)தனை இந்திய பொருளாதார வளர்ச்சி 6.8 விழுக்காடாக வீழும்!

புதுடில்லி, அக்.13- நடப்பு நிதி ஆண்டில் இந்திய பொரு ளாதார வளர்ச்சி 6.8 சத வீதமாக குறையும் என்று முந்தைய கணிப்பை விட குறைவாக பன்னாட்டு நிதியம் கணித்துள்ளது. 

அமெரிக்காவில், பன்னாட்டுநிதியம் மற்றும் உலக வங்கியின் ஆண்டுக் கூட்டம் நடக் கிறது. இதையொட்டி, உலக பொருளாதார பார்வை குறித்த தனது ஆண்டறிக்கையை பன்னாட்டுநிதியம் 11.10.2022 அன்று வெளியிட்டது. கடந்த நிதி ஆண்டில் (2021--2022) இந்திய பொருளாதார வளர்ச்சி 8.7 சதவீதமாக இருந்தது. ஆனால், நடப்பு நிதிஆண்டில் (2022-2023), இந்திய பொருளா தார வளர்ச்சி 6.8 சத வீதமாக குறையும் என்று பன்னாட்டுநிதியம் கணித்துள்ளது. 

கடந்த ஜூலை மாதம் வெளியிட்ட கணிப்பில், இந்திய பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக இருக்கும் என்று கூறியி ருந்தது. தற்போது, அதை விட 0.6 சதவீதம் குறை வாக கணித்துள்ளது. உலக பொருளாதாரம் மேலும், கடந்த ஜனவரி மாதம் வெளியிட்ட அறிக்கையில், 8.2 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணித்திருந்தது குறிப்பி டத்தக்கது. எனவே, நடப்பு நிதி ஆண்டின் 2ஆ-வது பாதி, எதிர்பார்த்ததை விட பலவீனமாக இருக் கும் என்று தெரிகிறது. 

இந்திய பொருளா தாரம் மட்டுமின்றி உலக பொருளாதாரமும் சரிவை சந்திக்கும் என்று பன்னாட்டுநிதியம் கணித்துள்ளது. அதன் படி, உலக பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதமாக குறையும் என்று கூறி யுள்ளது. கடந்த 2001-ஆம் ஆண்டுக்கு பிறகு, இது தான் மிகவும் குறைவான வளர்ச்சி ஆகும்.

பொருளாதாரத்தில் முதல் 3 இடங்களில் உள்ள அமெரிக்கா, அய் ரோப்பிய கூட்டமைப்பு, சீனா ஆகியவற்றின் பொரு ளாதாரமும் வீழ்ச்சியை சந்திக்கும் என்று கணிக் கப்பட்டுள்ளது. உலகில் மூன்றில் ஒருபங்கு நாடு கள் பொருளாதார சரிவை சந்திக்கும் என்றும் கூறப் பட்டுள்ளது. 

அமெரிக்க பொருளா தார வளர்ச்சி 1.6 சதவீத மாக குறையும் என்று தெரிகிறது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி 8.1 சதவீதத்தில் இருந்து 3.2 சதவீதமாக குறையும் என்று பன்னாட்டுநிதி யம் கணித்துள்ளது. சீனா வில் கரோனா முற்றிலும் ஒழிய வேண்டும் என்பதற் காக அடிக்கடி பொது முடக்கம் செய்யப்பட் டது, ரியல் எஸ்டேட் வர்த்தகம் பலவீனம் அடைந்தது ஆகியவை தான் இதற்கு காரணங்கள் என்று கூறப்படுகிறது. 

''உக்ரைன் போர், பண வீக்க உயர்வால் வாழ்க்கை செலவு அதிகரித்தல், சீனா வில் நிலவும் மந்தநிலை, வளர்ந்த நாடுகள் கடனுக்கான வட்டியை அதிகரித்தது ஆகியவை பெரும் சவால்களாக உரு வெடுத்து, உலக பொரு ளாதார மந்தநிலைக்கு காரணமாக அமைந்து உள்ளன'' என்று பன் னாட்டுநிதியத்தின் பொருளாதார ஆலோ சகர் பியரி ஆலிவியர் கொரிஞ்சாஸ், அந்த அறிக் கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment