அறிஞர் அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

அறிஞர் அண்ணா சிலைக்கு தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை, செப். 13- மதுரை நெல்பேட்டையில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு செப்.15ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். 

இதுகுறித்து திமுக தலைமைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில், காஞ்சி தந்த காவியத் தலைவர் - உலகத் தமிழர் உள்ளங்களில் எல்லாம் சிம்மாசனம் போட்டுக் கொலு வீற்றிருக்கும் செந்தமிழ் அறிஞர் - தமிழ் மொழி உயர்வுக்காகவும், தமிழர்களின் மேம்பாட்டுக்காகவும், தமிழ் நாட்டின் சிறப்புக்காகவும் வாழ்நாள் எல்லாம் ஓயாது பாடுபட்ட உத்தமர் - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு எனும் தாரக மந்திரத்தை அரசியல் உலகத்திற்கு அறிமுகம் செய்து வைத்த ஆற்றலாளர் - “இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்று தம்பிமார் பெரும்படையைக் கண்டு, நெஞ்சுயர்த்தி பெருமிதம் கொண்ட பெருமகன் - “மெட்ராஸ் ஸ்டேட்” என்ற பெயரை “தமிழ்நாடு” என்று பெயர் மாற்றம் செய்து தாய்க்குப் பெயர் தந்த தனிப் பெரும் தனயன் - சுயமரியாதை சுடரொளி - சொக்க வைக்கும் சொற்பொழிவாளர் - எழுத்து வேந்தர் - தென்னகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவர் - பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 114ஆவது ஆண்டு பிறந்த நாளான 15.9.2022 அன்று காலை 7.00 மணி அளவில் மதுரை, கீழவெளி வீதி - மேலவெளி வீதி சந்திப்பு, நெல்பேட்டை பகுதியில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலைக்கு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி முன்னணியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்கள். 

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment