ஹிந்துத்துவ செயல்பாடுகளின் விளைவு மறுதேர்விலும் தேர்ச்சி பெறாத கருநாடக மாணவர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

ஹிந்துத்துவ செயல்பாடுகளின் விளைவு மறுதேர்விலும் தேர்ச்சி பெறாத கருநாடக மாணவர்கள்

பெங்களூரு, செப்.13- கருநாடகத்தில் பி.யூ.சி. 2ஆ-ம் ஆண்டு மறுதேர்வு முடிவுகள் வெளியானது. இதில் 37.08  மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்று உள்ளனர்.

கருநாடகத்தில் பி.யூ.சி. 2ஆ-ம் ஆண்டு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி வெளியானது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் சுமார் 6 லட்சத்து 83 ஆயிரத்து 563 பேர் எழுதி இருந்தனர். தென் இந் தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் மிகவும் அதிக அளவு தேர்வில் தோல்வியடைந்தனர்.. இதனால் தேர்தலில் தோல்வி அடைந்த  . 2 லட்சத்து 60 ஆயி ரத்து 597 மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட்டு இருந்தது. இந்த மறுதேர்வை 1 லட்சத்து 75 ஆயிரத்து 905 மாணவர்கள் எழுதி இருந்தனர். இந்த நிலை யில் பி.யூ.சி. 2-ஆம் ஆண்டு மறு தேர்வு முடிவுகள் நேற்று (12.9.2022) வெளியானது. இதில் மீண்டும். 1 லட்சத்து 10 ஆயிரத்து 672 பேர் தோல்வி அடைந்து உள்ளனர்.  ஒட்டுமொத்தமாக 37.08 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று உள்ளார்கள். 

இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே கருநாடகாவில் ஹிந் துத்துவ அமைப்புகள் மாணவர் களிடையே மதவாத வன்முறையை வளர்த்துவிட்டக்காரணத்தால் மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தாமல் ஜெய் சிறீராம் என்று கூவிக்கொண்டும் காவி தலைப்பாகைகளை அணிந்து கொண்டும் தெருத்தெருவாக சுற்றியதன் விளைவாக அரைப் பங்கு மாணவர்கள் பள்ளிக் கல் வியில் தோல்வியடைந்து எதிர் காலத்தை இழந்துள்ளனர். 

துவக்கத்தில் கேள்வித்தாள் கள் கடினமாக இருந்தது. மறு தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள் என்று இருந்த நிலையில் தற்போது மறுதேர் விலும் அதிக அளவு தோல்வி அடைந்து பல லட்சம் மாணவர் கள் கல்வியை நிறுத்தி உள்ளனர். இவர்கள் எதிர்காலத்தில் ஹிந்த் துத்துவ அமைப்பினரின் அடி யாட்களாக மாறும் அபாயம் உள்ளதாக கருநாடக கல்வியி யல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்


No comments:

Post a Comment