வடலூரில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - கவியரங்கம் மற்றும் கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 4, 2022

வடலூரில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா - கவியரங்கம் மற்றும் கருத்தரங்கம்

வடலூர், செப். 4- வடலூர் நகர திராவிடர் கழக சார்பில் தந்தை பெரியார் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா கவியரங்கம் மற்றும் கருத்தரங்கம் 1.9.2022 அன்று மாலை 6 மணி முதல் 9 மணி வரை வடலூர் ஜெயப்பிரியா மண்டபத்தில் மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமையில் மண்டல தலைவர் பன்னீர்செல்வம் செயலாளர் தாமோதரன் பொதுக்குழு உறுப்பினர் காமராஜ் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது மாவட்ட அமைப்பாளர் மணிவேல் வரவேற்புரை ஆற்றினார். நகர செயலாளர் இரா குணசேகரன், இந்திரஜித், ஒன்றிய அமைப்பாளர் சேகர், மண்டல இளை ஞர் அணி செயலாளர் பஞ்சமூர்த்தி, மாவட்ட இளைஞரணி தலைவர் உதயசங்கர், மாவட்ட இளைஞரணி செயலா ளர் வேலு, அமைப்பாளர் டிஜிட்டல் ராமநாதன், மகளிர் அணி அமைப்பா ளர் முனியம்மாள், தலை வர் சத்யா குணசுந்தரி, வழக்கறிஞர் திராவிட அரசு, விருத்தாசலம் மாவட்ட செயலாளர் வெற்றிச்செல்வன், சேகர், ராமராஜ், ஒன்றிய தலை வர் கனகராஜ், செயலா ளர் செந்தில், வேல், சுமதி, பெரியார்தாசன், மீன் சுருட்டி, அசோகன், திலீ பன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினர்.

கவியரங்கம்

தந்தை பெரியார்-அறி ஞர் அண்ணா குறித்து புலவர் ராவணன் த.சி. இளந்திரையன், ஆசிரியர் செங்குட்டுவன் ஆகியோர் சிறப்பான கவிதைகளை வழங்கினர். திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்பு துணைச் செயலா ளர் பெருநர் கிள்ளி சிறப் புரை ஆற்றினார்.  தந்தை பெரியாரையும் அறிஞர் அண்ணாவையும் ஒப் பிட்டு பல்வேறு தகவல் களை இரு பெரும் தலை வர்களின் இன்றைய தேவையை விளக்கி அவ ருடைய உரை அமைந்தது. இறுதியாக கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் மத வெறியை தூண்டும் அமைப்புகளை கண்டித் தும் மதவெறிக்கும் ஜாதிய ஒடுக்கு முறைக்கும் பால்வார்க்கும் மத்திய அரசை சங்பரிவார் கும் பலை கண்டித்தும் உரை யாற்றினார். முடிவில் நகர அமைப்பாளர் முரு கன் நன்றி கூறினார். மாலை 5மணிக்கு வடலூர் குறுக்கு சாலையில் உள்ள தந்தை பெரியார் அண் ணல் அம்பேத்கர் சிலைக ளுக்கு கழகத் தோழர்கள் மாலை அணிவித்தனர்.


No comments:

Post a Comment