சவூதி அரேபியாவில் புத்தகக் காட்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

சவூதி அரேபியாவில் புத்தகக் காட்சி

ரியாத் பன்னாட்டு புத்தகக் காட்சி ஒவ்வொரு ஆண்டும் சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெறுகிறது. ஒருசில தனி நபர்கள், பெரும் நிறுவனங்கள், இலக்கிய அமைப்புகள், புத்தக வெளியீட்டாளர்கள் இவர்களின் கூட்டு முயற்சியால் இந்தப் புத்தகக் காட்சி தொடங்கப்பட்டது.

பார்வையாளர்களின் எண்ணிக்கை, விற்பனையின் அளவு, அதில் இடம்பெறும் கலாச்சார நிகழ்வுகளின் பன்முகத்தன்மை இவற்றை வைத்துப் பார்க்கும்போது அரேபிய மண்ணில் நடைபெறும் புத்தகக் காட்சிகளில் இது மிகவும் முக்கியத்துவம் நிறைந்ததாகக் கருதப்படுகிறது. இதில் அரபு நாட்டிலுள்ள புத்தக வெளியீட்டு நிறுவனங் களுடன் பன்னாட்டு நிறுவனங்களின் பங்கேற்பும் ஆண்டுக்காண்டு கூடிக் கொண்டேயிருக்கிறது. புத்தகக்காட்சியின் அபரிமித வளர்ச்சியைத் தொடர்ந்து கலாச்சார அமைச்சகம் இலக்கியம், புத்தக வெளியீடு மற்றும் மொழிபெயர்ப்பு இவற்றின் மேம்பாட்டுக்காக ஆணையம் ஒன்றை நிறுவியது. 

அது உள்நாட்டு மற்றும் பன்னாட்டு புத்தகக் காட்சிகளில் ஒரு தவிர்க்க முடியாத நிகழ்வாக இதை வளர்த்தெடுத்திருக்கிறது. புத்தகக் காட்சியை ஒழுங்குபடுத்துவது, மேம்படுத்துவது மற்றும் மேற்பார்வையிடும் பணிகளை இது செய்து வருகிறது. புத்தகக் காட்சிகள் மனித சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி கலாச்சாரத்தில் மனிதனை முன்னேறச் செய்வதில் பெரும் பங்களிக்கிறது என அது ஆழமாக நம்புகிறது. அதனால் அதன் மேம்பாட்டுக்காக கிங்டம் விஷன் - 2030 (KINGDOM VISION - 2030) என்ற முழக்கத்தை முன்வைத்து செயல்பட்டு வருகிறது. இது கலை, வாசிப்பு, எழுதுதல், நூல் வெளியீடு, புத்தகம் தயாரித்தல் மற்றும் மொழி பெயர்ப்புத்துறை நிபுணர்களைக் கொண்டு தினந்தோறும் பயிற்சிப்பட்டறைகள் நடத்த ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

ரியாத் புத்தகக் காட்சிக்கு வருபவர்கள் தங்கள் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், விழிப்புணர்வுடன் செயல்படவும் பெரிதும் உதவும் வகையில் இந்தப் பயிற்சிப் பட்டறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புத்தகக் காட்சியை ஒட்டி நடைபெறும் வெளியீட்டாளர்கள் மாநாடு உள்ளூர் , பிராந்திய மற்றும் பன்னாட்டு புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவித்து முதலீடுகளைக் கொண்டு வருவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவும் உதவு கிறது. 

அரேபிய மொழியில் உலக அறிவுச் சுரங்கங்கள் அனைத்தும் படிக்கக் கிடைக்க வேண்டும் என்பதற்காக பிற மொழி களிலுள்ள புத்தகங்களை அரபிக்கு மொழியாக்கம் செய்வதற்கும், அரபி மொழியிலிருந்து பிற மொழிகளுக்கு மொழி பெயர்ப்பதற்கு ஊக்குவிப்பதற்காகவும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. ரியாத் புத்தகக் காட்சி சரித்திரத்தில் முதன் முறையாக தமிழ்ப் புத்தகங்களுக்கென்று ஒரு அரங்கு இந்த ஆண்டுதான் அமைக்கப் பட இருக்கிறது. சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிக் கேஷன்ஸ், காலச்சுவடு பதிப்பகம் இவை இரண்டின் வெளியீடுகளையும் சேர்த்து தமிழின் 50 முன்னணிப் பதிப்பாளர்களின் - 500 பிரபலப் படைப்பாளர்களின் பல்வேறு பிரிவுகளில் வெளிவந்த 5,000 தலைப்புகளில் 50,000க்கும் மேற்பட்ட - ரூபாய் 10 முதல் ரூபாய் 5555 வரையிலான புத்தகங்கள் இங்கே அரங்கு எண்  - ணி 36 இல் விற்பனைக் குக் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்புக்கு : கார்த்திகேயன் புகழேந்தி

கண்ணன் சுந்தரம் 7200073075 / 8939738491 / 9677778861

புத்தகக்காட்சி நடைபெறும் இடம் :RIYADH INTERNATIONAL BOOKFAIR - 2022 RIYADH FRONT EXHIBITION AND CONVENTION CENTRE, RIYADH, SAUDI ARABIA DATE : from SEPTEMBER 29 to OCTOBER 8 TIMINGS : 

No comments:

Post a Comment