டில்லியில் பட்டாசு - வெடி தடை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

டில்லியில் பட்டாசு - வெடி தடை!

புதுடில்லி,செப்.8- டில்லியில் வரும் ஜனவரி 1-ஆம் தேதி வரை பட்டாசு உற்பத்தி, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு அரசு தடை விதித்துள்ளது. தீபாவளிக்கு முன்பு காற்று மாசு அளவை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக டில்லி அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து டில்லி சுற்றுச் சுழல் துறை அமைச்சர் கோபால் ராய்  தனது ட்விட்டர் பதிவில், ‘டில்லியில் அனைத்து வகை பட்டாசுகளின் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது. இதன் மூலம் காற்று மாசுபாடு அபாயத்தில் இருந்து மக்களை காப்பாற்ற முடியும். 

டில்லியில் இம்முறை ஆன் லைன் பட்டாசு விற்பனை மற்றும் விநியோகத்திற்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டுப் பாடு வரும் ஜனவரி 1-ஆம் தேதி வரை அமலில் இருக்கும்’ என்று கூறியுள்ளார்.

இந்த தடையை கண்டிப்புடன் அமல்படுத்த டில்லி காவல்துறை, மாசுக் கட்டுப்பாட்டுக் குழு மற்றும் வருவாய்த் துறையுடன் இணைந்து செயல் திட்டம் வகுக் கப்படும் என்றும் கோபால் ராய் கூறியுள்ளார்.

டில்லியில் கடந்த ஆண்டு செப்டம்பர் 28 முதல் இந்த ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வரை பட்டாசு விற்பனை மற்றும் பயன் பாட்டுக்கு அரசு தடை விதித்தது. பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் காற்று மாசுபாடு தொடர்பாக விழிப்புணர்வு பிரச்சாரமும் தொடங்கியது. தடையை மீறி பட்டாசு வெடித்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நாட்டில் காற்று மாசுபாடு அதிகம் உள்ள மாநிலமாக டில்லி உள்ளது. வாகனங்கள், தொழிற் சாலைகளில் இருந்து வெளியாகும் புகை, அண்டை மாநிலங்களில் எரிக்கப்படும் விவசாயக் கழிவுகள் ஆகியவையே டில்லியின் காற்று மாசுபாட்டுக்கு முக்கியக் கார ணங்களாக உள்ளன. இவை தவிர, ஆண்டுதோறும் தீபாவளிக்கு பிறகு டில்லியில் காற்று மாசுபாடு பல மடங்கு அதிகரிப்பதால் தீபா வளிக்கு முன்பு பட்டாசு விற்பனை மற்றும் பயன்பாட்டுக்கு டில்லி அரசு தடை விதித்து வருகிறது.

No comments:

Post a Comment