இதுதான் இந்தியாவின் பொருளாதாரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

இதுதான் இந்தியாவின் பொருளாதாரம்

அமெரிக்காவுக்குப் போகிறீர்கள். செலவுக்கு இந்தியரூபாய் உங்கள் கையில் உள்ளது. 10 ஆயிரம் ரூபாயை மாற்றுகிறீர்கள். 2014ஆம் ஆண்டில் உங்களுக்கு 170 அமெரிக்க டாலர்களைக் கொடுத் திருப்பார்கள். இப்போது சென்றால் அதே 10 ஆயிரம் ரூபாய்க்கு 133 டாலர்களைத் தான் தருவார்கள்.*

அதே 2014 ஆம் ஆண்டு. தாய்லாந்து போகி றீர்கள். 10 ஆயிரம் ரூபாயை மாற்றுகிறீர்கள். 5,400 'தாய் பாட்' கொடுத்திருப்பார்கள். இப்போது போனால் 4,200 'தாய் பாட்' தான் கிடைக்கும். 

அமெரிக்கா, தாய்லாந்தை விடுவோம். வங்க தேசத்தைப் பார்ப்போம். 2014 ஆம் ஆண்டு மே மாதம் அந்நாட்டிற்கு சுற்றுலா சென்றிருந்தால், 

10 ஆயிரம் ரூபாய்க்கு 13,100 பங்களாதேஷ் 'டக்கா' கிடைத்திருக்கும். இப்போது போனால் 11,300 டக்கா தான் கிடைக்கும். 

காரணம் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ந்து கொண்டிருக்கிறது. சரி; வெளிநாட்டு பணத்துடன் ஒப்பிட வேண்டாம். உள்நாட்டு நிலவரம் என்ன? 

Commen man -எளிமையாக யோசித்துப் பார்ப்போம். எனக்கும் அவ்ளோ தான் தெரியும். 

2014 ஆம் ஆண்டு 

(பிஜேபி ஆட்சிக்குவருவதற்கு முன்பு) சமையல் எரிவாயு விலை, பெட்ரோல் - டீசல் விலை, பேருந்துக் கட்டணம், இரயில் கட்டணம், சினிமா டிக்கெட் விலை, ஓட்டல்களில் உணவுகளின் விலை, பால் விலை, மின்சாரக் கட்டணம் & இன்ன பிற அத்தியா வசியப் பொருட்களின் விலை என்னவாக இருந்தது. அவற்றுடன் ஒப்பிடும் போது, கடந்த 6 ஆண்டுகளில் எவ்வளவு உயர்ந்துள்ளது? ஒரு காமன்மேனின் அத்தியாவசியத் தேவைகள் அனைத்துமே விலை உயர்ந்துள்ளன தானே? (இதில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் ஒரு சிலது மட்டுமே உண்டு).

2014 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு பேரல் கச்சா எண்ணெய்யின் விலை 113 டாலர். அதன் பிறகு மிகக் குறுகிய காலத்தில் அது குறைந்து 36 டாலர் வரைக்கும் வந்ததாக ஞாபகம். இப்போது 45 டாலர். சில மாதங்களுக்கு முன்பு 10 டாலர், 0 என மைனசில் கூட வர்த்தகம் ஆனது. 

ஆனால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை மட்டும் கூடிக் கொண்டே போகிறது. இது என்ன லாஜிக்? எங்கே போகிறது அந்தப் பணம்? காமன்மேன்களுக்கு ஏன் ஒரு நன்மை கூட கிடைக்கவில்லை? 

கரோனா லாக் டவுன் காலத்திலும், அத்தியாவசிய பொருட்களுக்கான வாகனங்கள் மட்டுமே இயங்கும் போதும் டோல் கேட்டில் சுங்க வரியை உயர்த் தினார்கள். இதெல்லாம் எவ்வளவு பெரிய அராஜகம்? 

இதுபற்றியெல்லாம் யாரையும் சிந்திக்க விடாமல், கேள்வி கேட்க விடாமல் தேசபக்தி, மாட்டுக்கறி, எல்லையில் ராணுவ வீரர்கள், காஷ்மீருக்குள் தீவிரவாதிகள், முஸ்லீம்கள் நாய்க்கறி சாப்பிட பாகிஸ்தான் போகணும், இது இந்துக்களின் பூமி, கந்தர் சஷ்டி, ராமர் கோயில், விநாயகர் சதுர்த்தி, இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லைன்னு அரசியல் பண்ணிட்டு இருக்கானுங்க.

அதுக்கு முரட்டு முட்டுக்கொடுக்க முட்டாள் கூட்டத்தையும் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

அவங்களை நினைச்சாத் தான் இன்னும் கொடூரமாகவும், பரிதாபமாகவும் இருக்கிறது. அவங்க கட்சியால் ஒரே ஒரு நல்லது கூட நடக்காமல், காமன்மேன்களில் ஒருவராக அவர்களுக்குமே பாதிப்பு தான் அதிகம். ஆனால், எனக்கு வலிக் கலையேன்னு முட்டுக் கொடுத்துட்டு இருக்காங்க. வெறுப்பை பரப்பிட்டும் இருக்கானுங்க. 

அப்பவும் அவனுங்க முட்டுத்தர்றாங்க. இதான் ஹைலைட்டே! 

அமெரிக்காவோ, தாய்லாந்தோ, வங்கதேசமோ...  அப்போ பத்தாயிரம் ரூபாய் எடுத்துட்டு போனதுடன் ஒப்பீடு செய்தால் இப்போ வீழ்ச்சி. இது ஒருபுறம் இருக்கட்டும். 10 ஆயிரம் ரூபாய் எடுத்துட்டு போறதுல எவ்ளோ சிக்கல் இருக்கு பாருங்க... இவ்வளவு விலைவாசி ஏற்றங்களையும் தாக்குப் பிடித்து, வருவாய் ஈட்டி, அதற்கு தனியா ஜி.எஸ்.டி கட்டி, கஷ்டப்பட்டு 10 ஆயிரம் ரூபாய் எடுத்துட்டுப் போனா, அதோட மதிப்பும் வீழ்ந்திருக்கும்! வெந்தப் புண்ணில் வேல் !

BJP ஆளும்வரை ஒவ்வொரு ஆண்டுக்கும் இது பொருந்தும். 

2014 இல் பாஜக ஆட்சி அமைக்கும் போதும் சரி, 2016 இல் 'டீமானிடைசேஷன்' சமயத்திலும் சரி... மோடியின் பக்தர்கள் என்னவெல்லாம் சொன் னார்கள் என்று நினைவு கூர்ந்து பாருங்கள். டாலர் மதிப்பு 40 ரூபாய்க்கு வரும்... பெட்ரோல் டீசல் விலை 50 ரூபாய்க்குக் கீழ் வரும்... தீவிரவாதிகள் செயல்பாடுகள் கட்டுக்குள் வரும்... ப்லா ப்லா ப்லா... ஆனால் என்ன தான் நடந்தது? 

டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி. வங்கதேச கரன்சிக்கு எதிராகக் கூட வீழ்ச்சி. கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத வீழ்ச்சி கண்ட போதும், பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு வரலாறு காணாத விலையேற்றம், பதான் கோட், புல்வாமா எனத் தீவிரவாத தாக்குதல்கள். (350 கிலோ வெடி பொருட்களுடன் எப்படி உள்ளே வந்தார்கள் என்பதே இன்றளவும் புதிராக இருக்கிறது), சமீபத்தில் கால்வான் பள்ளத்தாக்கில் சீனா அத்து மீறல்... 20 இந்தியவீரர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டு மரணித்தார்கள். என்ன தான் செய்கிறது இந்தியாவை ஆளும் பாஜக அரசு? யோசிக்கவே மாட்டார்களா? சீனா செய்த காரியத்தை பாகிஸ்தான் செய்திருந்தால் எவ்வளவு பொங்கியிருப்பார்கள்? இங்கே நம் அண்டை வீட்டில் வாழும் இஸ்லாமியர்களைக் கூட விரோதிகளாக கட்டமைத்து இருப்பார்களே.  ஆனால் சீனா விஷயத்தில் பெட்டிப்பாம்புகளாய் அடங்கியது ஏன்? 

சிந்திப்போம் அறியாமையில் இருப்போருக்கு புரியவைப்போம். மதமோ கடவுளோ நம்மைக் காப் பாற்றாது. நம்மை ஆளும் அரசுதான், நம் அனை வரையும் சமமாகப் பாவித்து நமக்கான நல்லாட்சி யைத்தர வேண்டும்!

மோடி உலகப்புனிதர் போலவும் பாஜகதான் உலகத்திலேயே மிகவும் யோக்கியர்களின் கட்சி என்பது போலவும் பீற்றிக் கொள்பவர்களே..? உங்கள் யாரிடமாவது பதில் இருக்கிறதா..?

1. எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கப் பயன்படும் பணம் யாருடைய நேர்மையான சம்பாத்தியம்?

2. ரபேல் கோப்புகள் ஏன் மாயமானது?

3. பா.ஜ.க. மீது கேள்வி கேட்கும் நீதிபதிகளின் மீது மட்டுமே பாலியல் பலாத்காரப் புகார்களும் கொலை மிரட்டல்களும் (ஏன் கொலையும்) செய்யப் படுவது ஏன்?

3. மோடியை பிரமோட் செய்யப் பயன்படுத்தப் பட்ட 10 ஆயிரம் கோடி ரூபாய் பணம் யாருடையது.. பிரசாந்த் கிஷோர் சம்பளம் உள்பட...?

4. அத்தனை ஊழல்வாதிகளும் பாஜகவில் இணைந்தவுடன் புனிதர்களாவது எப்படி?

5. எதிர்க்கட்சிக்காரர்கள் பாஜக மீது குற்றச்சாட்டுக் கூறியவுடன் அவர்கள் மீது மட்டும் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறை ரெய்டுகள் நடப்பது ஏன்? குற்றச்சாட்டுகள் கூறியவர்கள் அமைதியானவுடன் அந்த வழக்குகள் மாயமாவது ஏன்?

6. பாஜக ஆட்சிக்கு வருவதற்கு மிக முக்கியமான காரணமான 2ஜி வழக்கு ஏன் மேல் முறயீடு செய்யப்படவில்லை? அதை ஜோடித்த வினோத் ராய்க்கு ஓய்வு பெற்ற பின்னர் பதவி வழங்கியதேன்?

7. பல லட்சம் ரூபாய் கருப்புபணம் வெளி நாடுகளில் பதுக்கப்பட்டிருப்பதாகச் சொல்லப்பட்டது. கருப்பு பணத்தில் இதுவரை ஏன் ஒரு பைசா கூட மீட்கப்படவில்லை? குறைந்த பட்சம் கருப்புப் பணம் பதுக்கியவர் பட்டியலைக்கூட வெளியிட முடிய வில்லை?

8. பாஜக ஆட்சிக்கு வரும்வரை கருப்புப் பணமாக இருந்தவை பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் முதலீட்டுப் பணமாக மாறிய மர்மம் என்ன? ஜீ பூம்பா சொன்ன சூத்திரதாரி யார்?

10. ஏன் நாட்டின் பாதுகாப்புத் துறை உள்பட அத் தனை துறைகளும் தனியாருக்கு விற்கப்படுகின்றன..?

11. கடந்த தேர்தலில் கைப்பற்றப்பட்ட 3 கண்டெய்னர் பணம் யாருடையது என்பதை ஏன் வெளிப்படையாக இதுவரை அறிவிக்க முடிய வில்லை? பத்திரிகைகளில் இவ்வளவு வெட்ட வெளிச்சமாக வெளிவந்த கண்டெய்னர்களின் கதியே இதுவென்றால் தெரியாமல் கைமாறிய கண்டெய்னர்களின் எண்ணிக்கை என்ன?

12. மோடி பல்லாயிரம் கோடி ரூபாய் அரசுப் பணத்தை செலவழித்து வெளிநாடுகளுக்குச் செல்வது முதலீடுகளை ஈர்க்கத்தான் என்றால் ஏன் இதுவரை ஒரு பைசா கூட வெளிநாட்டு முதலீடு இந்தியாவிற்கு வரவில்லை?

13. மோடியின் வெளிநாட்டு பயணங்களில் அவரோடு செல்லும் தொழிலதிபர்கள் மட்டும் வெளி நாடுகளில் பல லட்சம் கோடி ரூபாய்கள் முதலீடு செய்வது எப்படி?

14. மோடியின் வெளிநாட்டுப் பயணம் இந்தியா விற்கு முதலீடுகளைக் கொண்டு வரவா? அல்லது அவரது நண்பர்கள் வெளிநாடுகளில் முதலீடு செய்ய முகவராகச் செல்கிறாரா?

15. இந்தியாவின் முக்கிய ஊழல்வாதியாக கூறப்பட்டு தண்டனை அனுபவிக்கும் லாலுவின் காலத்தில் லாபத்தில் இயங்கிய ரயில்வே தனியாருக்கு விற்கும் அளவிற்கு நஷ்டம் அடைந்தது ஏன்?

16. பெட்ரோல் மீதான 300 சதவீதம் இலாபம் மட்டுமே அரசுக்கு நோக்கம் என்றால் இன்னமும் 50 சதவீதத்திற்கு மேலான பெட்ரோல்  விற்பனை தனியார் வசம் இருப்பது ஏன்?

17. தேசியநெடுஞ்சாலைகள் அமைத்து 15 ஆண்டுகள் கடந்த பின்னரும் சுங்கக் கட்டணம் வசூலிக்க தனியாருக்கு தொடர்ந்து அனுமதி வழங்குவது ஏன்?

18. யாரிடமும் கொடுக்காமல் மிக ரகசியமாகப் பாதுகாக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதியளிக்கப்பட்டு பெறப்பட்ட ஆதார் தகவல்கள் ரிலையன்சின் ஜியோ நிறுவனத்திற்கு முழுவதுமாக வழங்கப்பட்ட காரணம் என்ன..?

19. ஏழைவிவசாயிகளுக்கும் மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் கூட தள்ளுபடி செய்யப்படாத கடன்கள் பெருநிறுவனங்களுக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கான கோடிகள் தள்ளுபடி செய்யப்படுவதன் காரணம் என்ன?

20. பல்லாயிரம் கோடிகள் உபரிபணம் இருக்கும் எல்அய்சி பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் காரணம் என்ன? எல்அய்சியில் எந்த விதமான நஷ்டம் ஏற்பட்டது?

21. மாநிலங்களின்  ஜிஎஸ்டி  பங்குகள் எங்கே மயமானது? 

இன்னும் பலஆயிரம் புதிரான கேள்விகளுக்கு விடை தெரியாத சாமானியனின் பகிர்வு...

- இள.புகழேந்தி 

முகநூலிலிருந்து

No comments:

Post a Comment