‘டிஜிட்டல் இந்தியா’வில் இப்படியும் முறைகேடு மின்வாரியத்தின் பெயரால் ரூ.1.68 லட்சம் பறிபோன அவலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

‘டிஜிட்டல் இந்தியா’வில் இப்படியும் முறைகேடு மின்வாரியத்தின் பெயரால் ரூ.1.68 லட்சம் பறிபோன அவலம்

மும்பை,செப்.8- அரசுத்துறைகள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரு கிறது. அதன் காரணமாகவே அண் மைக்காலமாக இணையவழியில் பொருளாதார மோசடிகள் அதி கரித்தபடி உள்ளது. இதனால் எளியமக்கள்கூட தங்கள் பணத்தை இழந்து வருகின்றனர். இணைய குற்றங்களுக்கு எதிராக சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் பல் வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். எனினும்   இணையம் மூலம் கொள்ளையடிப்பது தொடர்ந்து வருகிறது.

அதுபோன்ற இணையமோசடி ஒன்று மராட்டியத்தில் நடந்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் நாக்பூரைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார். இவர் மாநில சுரங்கத்துறையில் வேலை செய்து வருகிறார். இவரது அலை பேசிக்கு கடந்த ஆகஸ்ட் 29ஆம் தேதி குறுஞ்செய்தி ஒன்று வந்துள் ளது. அதில் உரிய காலத்தில் மின் கட்டணத்தை செலுத்தாததால் வீட்டில் மின் விநியோகம் துண்டிக்க வுள்ளதாக கூறப்பட்டிருந்தது. மேலும், இதுகுறித்த விவரங்களை அறிய இந்த இணையதளத்தில் பார்க்கவும் என்று கூறி இணைய இணைப்பு அனுப்பப்பட்டிருந்தது. இதனால் ராஜேஷ்குமார் அந்த இணைப்பைச் சொடுக்கியுள்ளார். சிறிது நேரத்தில் அவரது  இரு வங்கிக் கணக்கில் இருந்து சுமார் ரூ.1.68 லட்சம் தொகை எடுக் கப்பட்டுள்ளதாக குறுஞ்செய்தி வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து காபேர்கேதா காவல்நிலையத்தில் புகார் அளித் துள்ளார். பின்னர் இந்த புகார் சைபர் குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மோசடி செய்தவர்களை தொடர்ந்து தேடி வருகின்றனர்.


No comments:

Post a Comment