கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மனு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 8, 2022

கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி மனு

புதுடில்லி,செப்.8-- உச்சநீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த ரமேஷ் என்ப வர் பொதுநல மனு தாக்கல் செய்தார். 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

கச்சத்தீவு ராமநாதபுரம் சமஸ் தானத்துக்கு சொந்தமாக இருந் தது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு சமஸ்தான முறை முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சமஸ்தா னத்துக்கு சொந்தமான நிலப்பகு தியை ஒன்றிய அரசு தனது கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வந்தது. மீன் வலைகளை உலர்த்தவும், சமையல் செய்யவும் கச்சத்தீவை தமிழ்நாடு மீனவர்கள் பயன்படுத்தி வந்தனர். 

இதுபோன்ற சூழலில் இந்தியா வுக்கும், இலங்கைக்கும் இடையே கடந்த 1974-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் அடிப் படையில், கச்சத்தீவு இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் சட்டவிரோதமானது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட இரு நாட்டு பிரதமர் களுக்கும் அதி காரம் இல்லை. நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள வையிலும் இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் பெறாததால் இது செல்லு படியாகாது. 

எனவே கச்சத்தீவை மீண்டும் நமது ஒன்றிய அரசிடமே ஒப்ப டைக்க வேண்டும். கச்சத்தீவை ஒட்டியுள்ள பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன் பிடித்த காலம் தற்போது மாறிவிட்டது. கச்சத் தீவை இலங்கை கப்பற்படை முழு கட்டுப்பாட்டில் வைத்து, இந்திய மீன வர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,500 மீனவர்கள் கொல்லப் பட்டு உள்ளனர். இதுபோன்ற சூழலில் இந்திய மீனவர்களை இலங்கை கடற் படையினரிடம் இருந்து பாதுகாக்க கோரி தமிழ் நாடு சட்டமன்றத்தில் கடந்த 2013, மே 3-ஆம் தேதி தீர்மானம் இயற் றப்பட்டது. இந்த தீர்மானம் தொடர் பாக ஒன்றிய அரசு இதுவரை எவ் வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, 1974-ஆம் ஆண்டு கையெ ழுத்தான கச்சத்தீவு ஒப்பந் தம் தொடர் பான ஆவணங்களை தாக்கல் செய்ய கோரி ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. 

நிலுவை மனுக்களோடு இணைக்க உத்தரவு இந்த மனுவை நீதிபதி ஹெமந்த் குப்தா தலைமையிலான அமர்வு விசாரித்தது. 

அப்போது மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் சி.ஆர்.ஜெயசுகின் ஆஜராகி, 'ஆண்டுதோறும் நூற் றுக்கணக் கான இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பாதிக் கப்படுகின் றனர்' என வாதிட்டார். 

அப்போது நீதிபதிகள், 'இதே விவகாரம் தொடர்பாக ஜெயல லிதா தாக்கல் செய்த மனு நிலுவை யில் உள்ளதே, அதை விசாரித்து தீர்ப்பு அளித்தால் போதாதா?' என வினவினர். இதற்கு வழக்கு ரைஞர் ஜெயசுகின், 'இந்த மனு வையும் ஏற்கெனவே நிலுவையில் உள்ள மனுக்களுடன் இணைத்து விசாரிக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார். இதை ஏற்ற உச்சநீதிமன்றம், இந்த மனுவை ஏற் கெனவே நிலுவையில் உள்ள மனுக் களுடன் இணைக்க உத்தரவிட்டது.

No comments:

Post a Comment