தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழா வைகோ, டி.கே.எஸ்.இளங்கோவன், பேரா.மு.நாகநாதன் பங்கேற்று சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 5, 2022

தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழா வைகோ, டி.கே.எஸ்.இளங்கோவன், பேரா.மு.நாகநாதன் பங்கேற்று சிறப்புரை

சென்னை,செப்.5- தந்தைபெரியார் கொள்கை வழியில் தம்மை ஒப்படைத்துக்கொண்டு தம் வாழ்நாள் முழுவதும் அவர் வழியில் நடைபோட்டவர்கள் வாழ்வில் முன்னேறியுள் ளதும், அதேபோல், மற்றவர்களை முன்னேற்றுவதற்கும் பாடுபட்டவர்கள் வரிசையில் சிவகங்கை இராமச்சந்திரனார் வழி குடும்பத்தினர் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகின்றனர். நீதிபதி சத்தியேந்திரன் தம் வாழ்நாளில் தந்தைபெரியார் வழியில் சமுதாய சிந்தனையுடன் தொண்டாற்றினார் என்று  நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற தலைவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டனர்.

நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழா சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில்   3.9.2022 அன்று மாலை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கழகத்தலைவருக்கு டாக்டர் ச.கருணாகரன் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார். கழகத்துணைத் தலைவருக்கு பயனாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.

விழாவில் இணைப்புரை வழங்கிய பல் மருத்துவர் குறிஞ்சியின் பிறந்த நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பின ருமான வைகோ அவர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பட்டாடை அணிவித்து சிறப்பு செய்தார்.

நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழா மலரை வெளி யிட்டு வைகோ சிறப்புரை ஆற்றினார். நீதிபதி சத்தியேந்திரன் தம் அலுவலக அறையில், வீட்டில் தந்தைபெரியார் படத்தை எப்போதும் மாட்டி வைத்திருப்பார்.சிவகங்கை இராமச்சந் திரனார் குடும்பம் என்றால் பெரியார் குடும்பம் என்று குறிப்பிட்டார் வைகோ. 

 சங்காமிர்தம் குருசாமி, நீதிபதி அ.இராமமூர்த்தி,நீதிபதி இர.சுப்பையா ஆகியோர் மலரைப் பெற்றுக்கொண்டனர்.

நீதிபதி சத்தியேந்திரன் நூற்றாண்டு விழாக் குழு சார்பில் சிறப்பு விருந்தினர்களுக்கு பயனாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது.

நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர், திமுக செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், தமிழ்நாடு மாநில திட்டக்குழு மேனாள் துணைத் தலைவர் பேராசிரியர் மு.நாகநாதன் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிறைவாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். 

தந்தைபெரியார் வழியில் தொண்டற சிந்தையுடன் தம் பணியைத் தொடர்ந்தவர் நீதிபதி சத்தியேந்திரன். அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், திராவிட இயக்க தலைவர்கள், சிந்தனையாளர்களுடன் நெருக்கமாக இருந்து தொண்டாற்றியவர்.

நீதிபதியாக பணியிலிருந்தபோது, சாமியார் ஒருவர் நரபலி கொடுத்த வழக்கில் அந்த சாமியாருக்கு தூக்கு தண்டனை விதித்தும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தும் சமுதாயத்தில் மூடத்தனங்கள் தலையெடுக்கக்கூடாது என்று தீர்ப்பளித்தவர்.

சிவகங்கை இராமச்சந்திரனார் தந்தைபெரியார் வழியில் திராவிட இயக்கத்தில் தீவிரமாக களம் கண்டவர். பெயருக்குப் பின்னால் ஜாதிப்பட்டம் போடக்கூடாது என்கிற திராவிட இயக்கத் தீர்மானத்தின்படி தம் பெயருக்குப் பின்னால் இருந்த ஜாதிப்பட்டத்தை துறந்தவர். அவர்தம் குடும்பத்தினரும் அதே போன்று திராவிட இயக்கத்தில் தங்களை ஒப்படைத்துக் கொண்டு தந்தைபெரியார் கொள்கை வழியில் தொண்டுகளை தொடர்ந்தார்கள்.

இளம் வயதிலேயே சத்தியேந்திரன் ஈரோட்டில் பயிற்சி பெற்றவர். நீதிபதி ஆனபின்னரும் எப்போதும் தந்தை பெரியார் கொள்கை வழியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர். 

நெருக்கடி காலத்தில் (மிசா) தமிழர் தலைவர் ஆசிரியர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பலர் கைது செய்யப் பட்டு சிறையில் வதைக்கப்பட்டனர். நெருக்கடி காலத்தில் நீதிபதி சத்தியேந்திரன் நீதிபதி பதவியிலிருந்து கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டவர். 

அவருடைய நூற்றாண்டு விழா தமிழர் தலைவர் தலை மையில் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் திராவிட இயக்க சிந்தனையை புதுப்பித்துக் கொண்ட உணர்வுடன் அவர்தம் குடும்பத்தினர் நெகிழ்ச்சி யடைந்தனர்.

விழா முடிவில் டாக்டர் ச.கருணாகரன் நன்றி கூறினார்.

விழாவில் நீதிபதிகள், வழக்குரைஞர்கள், மருத்துவர்கள், அறிஞர் பெருமக்கள், நீதிபதி சத்தியேந்திரன் உறவினர்கள், குடும்பத்தினர், திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

கற்பூரபாண்டியன், ச.ராஜசேகரன், வழக்குரைஞர் இராமசாமி, டாக்டர் நிலா அமராவதி, ஜி.கே.ஆர். பாண்டியன், வழக்குரைஞர் செல்லபாண்டியன், சென்னை துறைமுக பொறுப்புக் கழக மேனாள் தலைவர் செல்வராஜ், எஸ்.பாஸ்கரன், காவல்துறை மேனாள் தலைவர் பி.காளிமுத்து, தேர்தல் ஆணைய மேனாள் அதிகாரி எம்.இராஜேந்திரன், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், நீதிபதி சுரேஷ்குமார், நீதிபதி பாஸ்கர், நீதிபதி ஏ.கே.ராஜன், திராவிடர் கழக வழக்குரைஞர் அணித் தலைவர் த.வீரசேகரன், வழக்குரைஞர் ஜெ.துரைசாமி,  பொருளாளர் வீ. குமரேசன், கழக துணைப் பொதுச் செயலாளர் பொறியாளர் ச.இன்பக்கனி, மோகனா வீரமணி, சுதா அன்புராஜ், சி.வெற்றிசெல்வி, அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், தாம்பரம் 

ப.முத்தையன், தென்சென்னை இரா.வில்வநாதன், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தலைவர் வா.நேரு, கோ.ஒளிவண்ணன், நல்லினி, பகுததறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா.தமிழ் செல்வன், பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன், செ.ர.பார்த்த சாரதி, அரும்பாக்கம் சா.தாமோதரன், பெரியார் மாணாக்கன் உள்பட அறிஞர் பெருமக்கள் விழாவில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment