உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தொகுதிகள் அதிகரிப்பு - அரசியல் உள்நோக்கம் : கே.எஸ்.அழகிரி கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

உத்தரப்பிரதேசத்தில் மக்களவைத் தொகுதிகள் அதிகரிப்பு - அரசியல் உள்நோக்கம் : கே.எஸ்.அழகிரி கண்டனம்

சென்னை, செப்.13 அரசியல் லாபம் பெறவே உத்தரப்பிரதேசத்தில் மக்கள வைத் தொகுதிகளை இருமடங்கு அதிகரிக்க முயல்கின்றனர் என்று கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

 சுயநலத்துக்காக நாடாளுமன்ற தொகுதிகளை அதிகரிக்க ஒன்றிய பா.ஜ.க. அரசு உத்தேசித்துள்ளது. மக்கள் தொகை அதிகரிப்பை கருத்தில் கொண்டு மக்களவைத் தொகுதி களையும், மாநிலங்களவை உறுப்பினர் களின் எண்ணிக்கையையும் அதிகரிப் பது சரியானதாக இருக்காது. 23 கோடியே 32 லட்சம் மக்கள் தொகை கொண்ட உத்தரப்பிரதேசத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இனி அதனை 132 தொகுதிகளாக அதிகரிக்கவும், 53 மாநிலங்களவை பதவிகளை அதிகரிக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது.

மக்கள் தொகையைக் கட்டுப்பாட் டுக்குள் வைத்து, வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு பிரதிநிதித்துவம் குறை வாகவும், மக்கள் தொகை அதிகம் உள்ள வளர்ச்சியடையாத உத்தரப் பிரதேச மாநிலத்துக்கு இரு மடங்கு அதிகமாக நாடாளுமன்ற தொகுதியை அதிகரிப்பதும் எந்த வகையில் நியாயம் ஆகும் மக்கள் தொகையை மட்டுமே அடிப்படையாக வைத்து மக்களவைத் தொகுதிகளை உயர்த்துவது பாரபட்ச நடவடிக்கையாகும். அரசியல் லாபம் பெறவே உத்தரபிரதேசத்தில் மக்கள வைத் தொகுதிகளை தொகுதிகளை இருமடங்கு அதிகரிக்க முயல்கின்றனர். இத்தகைய செயல் வன்மையாக கண் டிக்கத்தக்கது. இந்தியாவின் ஒட்டு மொத்த மக்கள் தொகை வளர்ச்சி சதவீத அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதி கரிக்க வேண்டும். அதே சதவீத அடிப் படையில் ஒவ்வொரு மாநில நாடாளு மன்ற தொகுதிகளின் எண்ணிக்கை யையும் உயர்த்த வேண்டுமே தவிர, ஒவ்வொரு மாநில மக்கள் தொகை உயர்வின் அடிப்படையில் தொகுதி களின் எண்ணிக்கையை உயர்த்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒன்றிய அரசின் கொள்கையின்படி குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல் படுத்தி, மக்கள் தொகையை குறைத்த தற்காக தண்டிக்கிற வகையில் ஒன்றிய அரசின் அணுகுமுறை இருக்கக்கூடாது. எனவே, அனைத்து மாநிலங்களுக்கும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது மற்றும் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு நாடாளுமன்ற தொகுதி களையும், மாநிலங்களவை எம்.பி. பதவிகளையும் அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment