காவல் ஆய்வாளர் பணி தேர்வில் முறைகேடு பா.ஜ.க. அமைச்சர் லஞ்சம் வாங்கியது குறித்து விசாரணை மேனாள் அமைச்சர் வலியுறுத்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 13, 2022

காவல் ஆய்வாளர் பணி தேர்வில் முறைகேடு பா.ஜ.க. அமைச்சர் லஞ்சம் வாங்கியது குறித்து விசாரணை மேனாள் அமைச்சர் வலியுறுத்தல்

பெங்களூரு, செப்.13 காவல்துறை துணை ஆய்வாளர் தேர்வில் முறைகேடு  நடைபெற்ற விவகாரத்தில் பா.ஜனதா சட்டமன்ற உறுப்பினர் லஞ்சம் வாங்கியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் பிரியங்க் கார்கே வலியுறுத்தி உள்ளார். 

 கருநாடக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேனாள் அமைச்சர் பிரியங்க் கார்கே பெங்களூருவில் பேட்டி அளிக்கையில் கூறியதாவது, கருநாடகத்தில் இணை காவல் ஆய்வாளர்கள் நியமன தேர்வு முறைகேட்டில் இன்னும் பாஜக அமைச்சர்கள் பலருக்கு தொடர்பு உள்ளது.

 பரசப்பா என்பவர், தனது மகனை காவல்துறை அதிகாரியாக  ஆக்க பா.ஜனதாவை சேர்ந்த மேனாள் அமைச்சரும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஒருவரிடம் பேரம் பேசியுள்ளதாகவும், ரூ.30 லட்சத்திற்கு பேசி முடித்து முதல்கட்டமாக ரூ.15 லட்சம் கைமாறியதாகவும் கூறப்படு கிறது. 

இந்த பேரம் பேசிய காட்சிப் பதிவு உள்ளது. ஆனால் கூறியபடி வேலை கிடைக்காததால், பணம் கொடுத்த நபர் தனக்கு பணத்தை திருப்பித் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு அந்த பாஜக சட்டமன்ற உறுப்பினர் பணத்தை அரசிடம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

 இதற்கு என்ன அர்த்தம். அந்த பணத்தை திருப்பி கொடுக்காததால் இந்த பேர விவகாரம் பகிரங்கமாகியுள்ளது.   

இதுவரை பேரம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினருக்கு விளக்க அறிக்கை அனுப்பவில்லை. முதலமைச்சர் பசவராஜ் பொம்மைக்கு தைரியம் இருந்தால் பேரம் பேசிய தனது கட்சி பாஜக சட்டமன்ற உறுப்பினரிடம் விசாரணை நடத்தட்டும். இதுகுறித்து தன்னிடம் உள்ள ஆவ ணங்களை காவல்துறையினருக்கு வழங் குவேன் என்று பசவராஜ் தடேசூர் சட்டமன்ற உறுப்பினர் கூறியுள்ளார். 

அதுகுறித்து காவல்துறை விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு பிரியங்க் கார்கே கூறினார்.


No comments:

Post a Comment