60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 4, 2022

60 ஆயிரம் ‘விடுதலை' சந்தா களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

சென்னை உயர்நீதிமன்ற  கூடுதல் குற்றவியல் வழக்குரைஞர் ராஜ் திலக் பகுத்தறிவு நாளேடான விடுதலைக்கு  சந்தா தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்கினார்.  உடன்: வழக்குரைஞர்  தளபதி பாண்டியன்,துரை அருண்.  கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் ரூ.6,900, திருநாகேஸ்வரம் ரூ.5600, திரிபுரசுந்தரி ரூ.2900 கூடுதல் ரூ.15,400 விடுதலைசந்தா தொகையினை பொதுச்செயலாளர்  இரா.ஜெயக்குமாரிடம் குடந்தை மாவட்ட தலைவர் கு.நிம்மதி,  தஞ்சை மண்டல செயலாளர் குடந்தை க குருசாமி, மாவட்ட செயலாளர் சு.துரைராசு ஆகியோர் வழங்கினர் (02.09.2022). கும்பகோணம் சிறீநகர் காலனி அ.பழனிச்சாமி மற்றும் மகள் சென்னை மருத்துவர் புனிதா ஆகியோர், இரண்டு அரையாண்டு சந்தாக்களை பொதுச்செயலாளர் தஞ்சை இரா ஜெயக்குமாரிடம் வழங்கினர்.  தஞ்சை மண்டல செயலாளர் குடந்தை க குருசாமி உடனிருந்தார். (02.09.2022)

திருவள்ளூர் மாவட்டம், திருவள்ளூர் நகரில் அமைந்துள்ள பாரதிதாசனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் உமாசங்கர் ஓராண்டு விடுதலை சந்தாவினை திராவிடர் கழக  மாவட்ட துணைச் செயலாளர் இரா.ஸ்டாலினிடம் வழங்கினார். ஆண்டிமடம் ஒன்றிய இளைஞரணி தலைவர் வே.செந்தில் ஆறு மாத விடுதலை சந்தாவிற்கான தொகையினை (ரூ.1000) அரியலூர் மாவட்ட செயலாளர் க.சிந்தனைச் செல்வனிடம் வழங்கினார். காட்பாடி வட்டம், கே.வி.குப்பம் மேனாள் ஒன்றியப் பெருந்தலைவரும், கிழக்கு ஒன்றிய செயலாளருமான அம்மணாங்குப்பம் கே.சீத்தாராமன் மற்றும் குடியாத்தம் நகர தி.மு.க. மேனாள் பொறுப்பாளர் ஏ.நடராசன் ஆகியோர் மண்டல தலைவர் வி.சடகோபன், மாவட்ட தலைவர் இர.அன்பரசன் ஆகியோரிடம் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினர்.

மேட்டுப்பாளையம் மாவட்டத்தலைவர் சு.வேலுச்சாமி, மவட்ட செயலாளர் ரெங்கசாமி, நகரத்தலைவர் பழனிச்சாமி, நகரச்செயலாளர் சந்திரன், காரமடை ஒன்றியத் தலைவர் ராஜா ஆகியோர் கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  விடுதலை  சந்தா முகவரிகளை  வழங்கினர். உடன் மாநில இளைஞரணி அமைப்பாளர் கோவை ஆ.பிரபாகரன் (30-08-2022). கோபிச்செட்டிப்பாளையம் மாவட்டத்தலைவர் சிவலிங்கம், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்  விடுதலை  சந்தா ரூ.32,500  வழங்கினார். உடன் மாநில இளைஞரணி அமைப்பாளர் கோவை ஆ.பிரபாகரன், காரமடை ராஜா, சி.மதிவதனி (30-08-2022). ம.தி.மு. மாவட்ட செயலாளர் கோபி ம.கந்தசாமி - மாவட்ட பக தலைவர் சீ. தமிழ்செல்வி ஆகியோர் 5 ஆண்டு விடுதலை சந்தா ரூ10 ஆயிரத்தை மாவட்ட, தலைவர் சிவலிங்கத்திடம் வழங்கினர். 


No comments:

Post a Comment