பூஸ்டர் தடுப்பூசி-கோர்பேவாக்ஸ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

பூஸ்டர் தடுப்பூசி-கோர்பேவாக்ஸ்

புதுடில்லி, ஆக. 11 நாட்டில் அதிகரித்து வரும் கரோனா பாதிப்புகளை கட்டுப் படுத்தும் நோக்கில் தடுப் பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் செலுத்திக் கொள்ள அரசு அனுமதி அளித்து உள்ளது. 

இந்நிலையில், 18 வய துக்கு மேற்பட்ட அனை வரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள் ளவும் அரசு அறிவுறுத்தி உள்ளது. கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்கள், எந்த தடுப்பூசியை முதல் 2 டோஸ்களாக செலுத்திக் கொண்டார்களோ, அதனையே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாகவும் செலுத்திக் கொள்கின் றனர். இந்நிலையில், அய் தராபாத்தில் உள்ள பயா லஜிக்கல்-இ நிறுவனம் கோர்பேவாக்ஸ் என்ற பெயரிலான தடுப்பூசியை உருவாக்கி தயாரித்து வரு கின்றனர். கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளில் எந்த தடுப்பூசியை 2 டோஸ்கள் செலுத்தி இருந்தாலும், செலுத்தி 6 மாதங்கள் ஆனவர்கள், இந்த தடுப்பூசியை செலுத் திக் கொள்ளலாம் என தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப அறிவுறுத் தலுக்கான கரோனா பணிக்குழு, ஒன்றிய அர சுக்கு பரிந்துரை செய்தது.

இதன்படி, 18 வயது பூர்த்தியடைந்த நபர்க ளுக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத் துவதற்கான பரிந்துரை யில் இருந்த தடுப்பூசிக்கு ஒன்றிய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால், கரோனாவுக்கு எதிராக கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரு முதன்மை தடுப்பூசிகளில் எதனை முதலில் போட்டு கொண்டிருந்தாலும், அதற்கு பூஸ்டர் டோசாக கோர்பேவாக்ஸ் தடுப் பூசியை பயன்படுத்த அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.


No comments:

Post a Comment