உள்ளதைக் காட்டும் ‘ஸ்டிக்கர்' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

உள்ளதைக் காட்டும் ‘ஸ்டிக்கர்'

உடற்பயிற்சி செய்பவரின் தசை கள் எப்படி இருக்கின்றன என்பதை நேரலை காட்சியாக பார்க்க முடிந் தால் எப்படி இருக்கும்? தாயின் வயிற்றில் குழந்தை வளர்வதை நேரடியாக மருத்துவரால் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்?

இதற்கெல்லாம் உதவும் ஒரு கருவியை, அமெரிக்காவின் மாசா சூசெட்ஸ் தொழில்நுட்ப நிலையத் தின் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். 'அல்ட்ரா சவுண்டு ஸ்டிக்கர்' எனப்படும் அந்த சிறிய கருவியை, உடல் மீது வைத்தால், 48 மணி நேரத்திற்கு, உள்ளிருக்கும் பாகங்களை அப்படியே வெளியே காட்டும்.

தோலைத் தாண்டி, செவி உணரா ஒலி அலைகளை உடலுக்குள் அனுப்பி, அதை திரும்பப் பெறும் நூற்றுக்கணக்கான டிரான்ஸ்டியூசர்கள் இந்த ஸ்டிக்கரில் உள்ளன. உடலோடு ஒட்டுவதற்கேற்ற எலாஸ்டோமர் பட்டியும், அதன் மேல் ஹைட்ரோஜெல் பசையும் இருக்கின்றன.

ஸ்டிக்கரிலுள்ள மீஒலி டிரான்ஸ்டியூசர்கள் உடலின் உள்ளுறுப்புகளை துல்லியமாக படம்பிடித்து வெளியே உள்ள திரையில் காட்டும்.இக்கருவி வயர்கள் இணைப்பின் மூலமே செயல்படுகிறது. விரைவில், கம்பியின்றி, தொலைவில் உள்ள மருத்துவரும் உறுப்புக்களை பார்க்கும் வசதி வந்துவிடும் என எம்.அய்.டி., விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment