பூமிக்கடியில் சரக்கு ரயில்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

பூமிக்கடியில் சரக்கு ரயில்!

போக்குவரத்து நெரிசல்; வாகனங்களின் பேரிரைச்சல். இந்த இரு சமூகப் பிரச்சினைகளையும் தீர்க்க ஒரே வழி சுரங்கச் சாலைப் போக்குவரத்து தான் என்கிறது, சுவிட்சர்லாந்திலுள்ள கார்கோ சோஸ் டெரெய்ன் நிறுவனம்.

வரும் 2031இல், ஜூரிச்சிலிருந்து 70 கி.மீ., நீள நிலத்தடி காந்த ரயில் தடம் போடப்படவுள்ளது. காந்த ரயில் தண்டவாளத்திலிருந்து 1 செ.மீ., உயரம் மிதக்கும் - எனவே அதிர்வே எழாது.

காந்த ரயிலுக்கான மின்சாரம் முழுவதும் மாற்று எரிசக்தி மூலமே பெறப்படும். இதனால் சூழலுக்கு இணக்கமான போக்குவரத்தாக இது இருக்கும். மேலும், பெரும்பாலும், சரக்கு மற்றும் மறுசுழற்சிக்கான குப்பைகளை மட்டுமே நிலத்தடி காந்த ரயில் சுமக்கும்.

No comments:

Post a Comment