ஒரே நாடு என்ற எண்ணமே தவறான எண்ணம் நீண்ட நாட்களாக எச்சரித்து வருகிறோம் - ப.சிதம்பரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 15, 2022

ஒரே நாடு என்ற எண்ணமே தவறான எண்ணம் நீண்ட நாட்களாக எச்சரித்து வருகிறோம் - ப.சிதம்பரம்

காரைக்குடி, ஆக.15 ஒரே நாடு என்ற எண்ணமே தவறான எண்ணம், இந்த நாட்டிற்கு உள்ளே பல மாநிலங்கள் இருக்கின்றன, பல மொழிகள் இருக் கின்றன என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.   காங்கிரஸ் மூத்த தலைவரும், மேனாள் ஒன்றிய நிதி அமைச்சருமான ப.சிதம் பரம் காரைக்குடியில் செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார். அப் போது அவர் கூறியதாவது

 நானும் என்னுடைய கட்சியும் நீண்ட நாட்களாக எச்சரித்து வரு கிறோம்.  ஒரே நாடு என்ற எண்ணமே தவறான எண்ணம். இந்த நாட்டிற்கு உள்ளே பல மாநிலங்கள் இருக்கின்றன. பல மொழிகள் இருக்கின்றன. பல கலாச்சாரங்கள் இருக்கின்றன.பல வரலாறுகள் இருக்கின்றன. பல பழக்க வழக்கங்கள் இருக்கின்றன. மாநில அதிகாரி மாநில அரசின் அதிகாரங் களில் தலையிடக்கூடாது. மாநில அரசின் அதிகாரங்களை பறிக்கும் முயற்சி இது. நீட் தேர்வை எதிர்ப்பதற்கு பல காரணங்களை சொல்கிறார்கள். நான் ஒரு காரணத்தை தான் ஆரம்பத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறேன். ஒரு மாநிலம் தன்னுடைய நிதியிலிருந்து தன்னுடைய மாநில மக்களுக்காக கல்லூரி நிறுவினால் அதில் எந்ந மாணவர்களை சேர்ப்பது என முடிவெடிப்பதற்கு அந்த மாநிலத் திற்கு அதிகாரம் கிடையாதா? இது என்ன வேடிக்கை. பொம்மை அரசாக மாநில அரசுகள் இருக்கும், ஒன்றிய அரசு தான் எல்லா முடிவுகளையும் எடுக்கும் என்றால் என்ன அரசு முறை? பல காரணங்கள் இருந்தாலும் இந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே நீட்டை எதிர்க்கலாம். இப்போது நீட், க்யுட் என எல்லா தேர்வுகளையும் ஒருங்கிணைத்து ஒரே தேர்வு என்றால் மாநில அரசு எதற்கு? மாநில உயர்கல்வி அமைச்சர் எதற்கு? உயர்கல்வி துறை எதற்கு? என கேள்வி எழுப்பினார்.

ஒரே நாடு, ஒரே அடையாள அட்டை, ஒரு நாடு ஒரே உணவுப் பங்கீட்டு அட்டை, ஒரு நாடு ஒரு தேர்வு, ஒரு நாடு ஒரு மொழி, ஒரு நாடு ஒரு கலாச்சாரம், ஒரு நாடு ஒரு பழக்க வழக்கம், ஒரு நாடு ஒரு கட்சி என்று வந்து நிற்கும். ஒரு நாடு ஒரு தலைவர் என வரும். இந்த விபரீத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். அந்தந்த மாநிலத் தில் உள்ள மக்கள் அவர்கள் பல பொருட்களில் சுயாட்சி பெற்ற அமைப் பாக சுயமாக சிந்தித்து முடிவெடுக்க கூடிய அமைப்பாக மாநில அரசுகள் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப் பட்டன. இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment