விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்களுக்கு கொடியேற்றும் உரிமை பெற்றுத்தந்தவர் கலைஞர் சுதந்திர தினம்- கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 15, 2022

விடுதலை நாளில் மாநில முதலமைச்சர்களுக்கு கொடியேற்றும் உரிமை பெற்றுத்தந்தவர் கலைஞர் சுதந்திர தினம்- கோட்டை கொத்தளத்தில் மூவர்ணக் கொடி ஏற்றினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை,ஆக.15- நமது நாட்டின் 75-வது சுதந்திர தின விழா இன்று நாடு முழுவதும்   கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா இன்று  கொண்டாடப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை போர் நினைவு சின்னத்தில் இருந்து காவல்துறையினர் மோட்டார் சைக்கிள் புடைசூழ அழைத்து வந்தனர். கோட்டை கொத்தளத் தின் முன்பாக காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். காவல்துறையினரின் பேண்ட் வாத்திய இசையுடன் தேசிய கீதம் இசைக் கப்பட்டது. 2ஆவது ஆண்டாக கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

பின்னர் அவர் உரையாற்றியபோது கூறியதாவது: 

விடுதலைப் போராட்ட வீரர் களுக்கான மாதாந்திர ஓய்வூதிய தொகை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாக உயர்த்தப்படுகிறது. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தப்படுகிறது. அக விலைப்படி உயர்வு, ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் பொருந்தும். 1-7-2022 முதல் அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும். விடுதலை நாள் அருங்காட்சியகம் சென்னையில் அமைக் கப்படும்.  

இவ்வாறு அவர் கூறினார்.


No comments:

Post a Comment