அவசர சட்டங்களுக்கு கையெழுத்திட மறுக்கும் ஆளுநர் பதவி தேவையற்றது என்பதை ஆரிப் முகம்மது கான் நிரூபித்துள்ளார்! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் விமர்சனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 15, 2022

அவசர சட்டங்களுக்கு கையெழுத்திட மறுக்கும் ஆளுநர் பதவி தேவையற்றது என்பதை ஆரிப் முகம்மது கான் நிரூபித்துள்ளார்! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடும் விமர்சனம்

திருவனந்தபுரம், ஆக. 15 -  கேரளாவில் பினராயி விஜயன் தலைமை யிலான இடது ஜனநாயக முன்னணி அரசு, மக்கள் நலனை முன்னிறுத்தி பிறப் பித்திருந்த 15 அவசர சட்டங்களுக்கு ஆளுநர் ஆரிப் முகமது கான் கையெ ழுத்திட மறுத்துவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆளுநருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரி வித்து வருகின்றனர். ஆளுநர் பதவி தேவை யற்றது என்பதை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மீண்டும் நிரூ பித்துள்ளார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யும் சாடியுள்ளது. 

இதுதொடர்பாக அது தனது ‘ஜன யுகம்’ ஏட்டில் எழுதியுள்ள தலையங் கத்தில் கூறப்பட்டிருப்பதாவது: “சங்பரி வார் பின்புலத்திலிருந்து கேரள ஆளுநர் பதவிக்கு வந்த ஆரிப் முகமது கான்  மீண்டும் அரசியல் நிலைப் பாடுகளை எடுத்து  மாநில நிர்வாகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் நடவ டிக்கையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.

இதற்குமுன்பு ராஜ்பவனை அரசி யல் மேடையாக மாற்ற முயற்சித் துள்ளார். அரசமைப்பு சட்டம் பல வரம்புகளை கொண்டது  என்பதை உணராமல் மக்களால் தேர்ந்தெடுக் கப்பட்ட அரசுக்கு எதிராக அதிகார வரம்பு மீறல் செய்ய முயல்வதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன. ஆளுநரின் ஒப்புதலுடன் பல அர சாணைகள் வெளியிடப்பட்டன. ஆனால், லோக் ஆயுக்தா சட்டத் திருத்தம் உள்பட 11 முக்கியச் சட்டங்கள் ஆளுநரின் தேவையற்ற பிடிவாதத் தால் தற்போது செல்லாது என அறிவிக்கப் பட்டுள்ளன. 

இதன் மூலம் அரசு நிர்வாகத்துக்கு அவர் இடையூறு ஏற் படுத்த முயல்கிறார். அவசரச் சட் டங்கள் ரத்து செய்யப்பட்டபிறகு, ஏற் கெனவே உள்ள சட்டங்களே நடை முறைக்கு வரும். ஆளுநர் கீழ்த்தரமான அரசியல் நடத்துகிறார் என்பது தெளிவாக தெரிகிறது. ஆளுநர் பதவியே தேவை யற்றது என்பதை ஆரிப் முகமது கான் மீண்டும் நிரூபித்துள்ளார்''. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment