சட்டக்கல்வித் துறையின் முதல்பெண் இயக்குநராக பேராசிரியர் விஜயலட்சுமி நியமனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

சட்டக்கல்வித் துறையின் முதல்பெண் இயக்குநராக பேராசிரியர் விஜயலட்சுமி நியமனம்

சென்னை, ஆக. 11- தமிழ்நாடு சட்டக்கல்வித் துறையின் முதல் பெண் இயக்குநராக பேராசிரியர் ஜெ.விஜயலட் சுமி சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சட்டத் துறை அமைச்சகத்தின்கீழ் இயங்கும் சட்டக்கல்வி இயக் குநரகத்தின் இயக்குநராக இருந்த டி.சொக்கலிங்கம் கடந்த மே மாதம் பணி ஓய்வு பெற்றார். அதன்பின் இயக்கு நர் பணியானது பேராசிரியர் ஜெ.விஜயலட்சுமிக்கு முழு கூடுதல் பொறுப்பாக கடந்த மே 31-ஆம் தேதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சட்டக்கல்வித் துறையின் புதிய இயக்குநரா கவும் தற்போது அவரே நிய மனம் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 25-ஆம்தேதி பொறுப்பேற்றுக் கொண்ட விஜயலட்சுமி, பாண்டிச்சேரி யில் உள்ள அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்புகளை முடித்துள்ளார்.

தமிழ்நாடு டாக்டர் அம் பேத்கர் சட்டப் பல்கலைக்கழ கத்தில், சட்டத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதலாவது பெண் ஆராய்ச் சியாளர் என்ற சிறப்பும் இவருக்கு உண்டு. திருச்சி அரசு சட்டக் கல்லூரியில் இளநிலை பேராசிரியராகக் கல்விப்பணியை தொடங்கிய இவர், 24 ஆண்டுகால கற்பித் தல் அனுபவம் கொண்டவர்.

செங்கல்பட்டு, வேலூர், சென்னை பட்டறைப்பெரும் புதூர் மற்றும் புதுப்பாக்கம் அரசு சட்டக்கல்லூரிகளில் முதல்வராகவும் இவர் பணி யாற்றியுள்ளார். சட்டக் கல்வி இயக்குநரகத்தின் 69 ஆண்டுகால வரலாற்றில் பெண் இயக்குநர் பொறுப் பேற்றிருப்பது இதுவே முதல் முறை.

No comments:

Post a Comment