பா.ஜ.க.வுக்கு எதிராக போராடத் தயாராகுங்கள்! காங்கிரசாருக்கு சித்தராமையா வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

பா.ஜ.க.வுக்கு எதிராக போராடத் தயாராகுங்கள்! காங்கிரசாருக்கு சித்தராமையா வேண்டுகோள்

பெங்களூரு, ஆக. 11- கருநாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி யின் சார்பில் வெள்ளையனே வெளியேறு போராட்ட நினைவு நாள் நிகழ்ச்சி பெங் களூரு குயின்ஸ் சாலையில் உள்ள அக்கட்சியின் அலுவ லகத்தில் 9.8.2022 அன்று நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலை வர் சித்தராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர். 

அப்போது சித்தராமையா பேசியதாவது:- 1942ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற மாநாட்டில் காந்தியார், வெள்ளையனே வெளியேறு என்று முழக்கமிட்டார். அதே நாள் "செய் அல்லது செத்து மடி" என்றும் சுதந்திர போராட் டக்காரர்களுக்கு காந்தியார் வேண்டுகோள் விடுத்தார். 

அப்போது ஒரு லட்சத் திற்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்களை ஆங்கிலேய காவல்துறையினர் கைது செய்தனர். ஆர்.எஸ்.எஸ். 1925ஆம் ஆண்டு தொடங்கப் பட்டது. ஆனால் சுதந்திரத் திற்காக நடைபெற்ற எந்த போராட்டத்திலும் அந்த அமைப்பினர் பங்கேற்று சிறைக்கு செல்லவில்லை.

இப்போது பா.ஜனதாவி னர் ஹர்கர் திரங்கா இயக் கத்தை நடத்துகிறார்கள். இந் திய தேசிய கொடியை, ஆர். எஸ்.எஸ். தலைவர்கள் எதிர்த் தனர். 53 ஆண்டுகள் காலம் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றவில்லை. இளைஞர்கள் 2 பேர் அங்கு சென்று கலாட்டா செய்ததை அடுத்து தேசிய கொடியை ஏற்றியுள்ளனர். ஜாதிகள் இல்லாமல் இருந்திருத்தால் சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு இருந்திருக்காது. ஆயிரக் கணக்கான ஆண்டுகள் சூத் திரர்கள் மற்றும் பெண்க ளுக்கு கல்வி கிடைக்கவில்லை. போலி பசவண்ணர் வந்த பிறகு கருநாடகத்தில் அனை வருக்கும் கல்வி கிடைக்க தொடங்கியது. 

தேசியக்கொடியை எதிர்ப் பவர்களிடம் தேசபக்தி இருக் குமா?. நாட்டிற்கு சுதந்திரம் காங்கிரஸ் கட்சியால் கிடைத் தது. காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் ஏராளமானவர் கள் சுதந்திரத்திற்காக உயர்த் தியாகம் மற்றும் பொருட் தியாகம் செய்தனர். ஆனால் இன்று ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவினர் நமக்கு தேப சக்தி குறித்து பாடம் நடத்து கிறார்கள். நாம் இன்று போலி தேபசக்தர்களின் வாயை மூட வேண்டும். பா.ஜனதாவினருக்கு ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனம் மீது கவுரவம் இல்லை. இத் தகையவர்கள் தான் இன்று நமது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். பா.ஜனதாவுக்கு நாம் அ¬ னவரும் போராட தயாராக வேண்டும். நாட்டின் சுதந் திரத்திற்காக போராடிய நேரு 11 ஆண்டுகள் சிறையில் இருந்தார். 

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

No comments:

Post a Comment