ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 29, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* 2024 தேர்தலில் மோடியின் ‘குஜராத் மாடல்’ போலியானது என்பதை தனது மாநில வளர்ச்சியின் மூலம் வெளிக்கொணர இருப்பதாக டி.ஆர்.எஸ். தலை வரும் தெலங்கானா முதலமைச்சருமான கே.சந்திரசேகர ராவ் தகவல்.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு ராகுல் காந்தி மட்டுமே அனைவரின் தேர்வு என சல்மான் குர்சித் கருத்து.

தி டெலிகிராப்:

* மேற்கு வங்கம் பாக்தா, வடக்கு 24-பர்கானாஸ் பகுதிக்கு சென்ற திரிணாமுல் காங்கிரசின் பிரதிநிதிகள் குழு, இரண்டு பி.எஸ்.எப். ஜவான்களால் ஒரு பெண் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டதை அடுத்து, எல்லையில் உள்ள மத்தியப் படைகளிடம் சில பாஜக தலைவர்கள் அதிக ஈடுபாடு காட்டுவதாகக் குற்றம் சாட்டினர்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ராஜஸ்தான் ஆளுநர் மாளிகையில் ராமன் கதா காலேட்சபம் என்பது ஹிந்துத்துவா சித்தாந்தத்தை வளர்ப் பதற்கான மறைமுக வழி என மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு.

.- குடந்தை கருணா


No comments:

Post a Comment