ஈராயிரம் ஆண்டு கருவறைத் தீண்டாமை இருள் நீக்கி ஓராண்டு நிறைவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 17, 2022

ஈராயிரம் ஆண்டு கருவறைத் தீண்டாமை இருள் நீக்கி ஓராண்டு நிறைவு!

ஆகஸ்ட் 14 -  பொன்னெழுத்துக்களால்  வரலாறு தன்னைப் பதிவு செய்த நாள்!

பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞரை நினைவு கூர்கிறோம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றிகள் கோடி!

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு

(TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)

இந்திய வரலாற்றில்  பொன்னேட்டில் பொறிக்கப்பட வேண்டிய நாள் ஆகஸ்ட் 14,2021.பல்லாயிரம் ஆண்டு தமிழ்நாட்டு வரலாற்றில் கடந்த 50 ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சிதான் மகத்தானது. மன்னர்களின் ஆட்சிகளைவிட, சமத்துவம்,சமூகநீதி என்ற விளிம்புநிலை மக்களை மய்யப்படுத்திய கோட்பாடுகள் ஆட்சி அதிகாரத்திலும் விதைக்கப்பட்டு வளர்ந்து செழித்த காலமிது. 

சமூகத்தின் மிக முக்கிய அதிகார மய்யமான கோயில் கருவறையில் 2000 ஆண்டுகளாக நிலவி வந்த பார்ப்பனீய மேலாண்மை அடிப்படையிலான கரு வறை தீண்டாமை இருள் அகற்றப்பட்ட காலமும் இதுதான்.

திமுக ஆட்சியில் பல சாதனைகள் இருந்தாலும், கருவறைத் தீண்டாமையை அகற்ற எடுத்த முயற்சியே வரலாறு  போற்றும் நிகழ்வு. அனைத்து ஜாதி அர்ச்சகர் நியமனம் நிகழ்ந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அர்ச்சகர் நியமத்திற்காக பெரும் முயற்சியெடுத்த சமூக நீதிக் காவலர் அய்யா முத்தமிழ்  அறிஞர் கலைஞர் அவர்களை இன்னா ளில் நினைவு கூர்கிறோம்.  கலைஞரின்  நினைவிடத்தில்  மரியாதை செலுத் துகிறோம்.

ஓராண்டிற்கு முன்பு இந்நாளில்  அர்ச்சகர் பணிநியமனம் செய்த  தமிழ் நாடு முதலமைச்சர் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு எங்களுடைய அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் சார் பாகவும், அரசு கோயில் அர்ச்சகர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 

முதலமைச்சரின் தளபதியாக நின்று வென்று காட்டிய செயல்வீரர்

இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு,  இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் சந்திர மோகன்  , குமரகுருபன் ஆணையர் , எங்களுடன் கடந்த 15 ஆண்டுகளாக இணைந்து போராடி வரும் முற்போக்கு அமைப்புத் தோழர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நம்மை கவலை கொள்ளச் செய்யும் விசயங்களும் நடந்து வருவதை இந் நாளில் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அர்ச்சகர் நியமனம், விதிகள், இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தை எதிர்த்து 25-க்கும் மேலான வழக்குகள் தொடுக்கப் பட்டு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. வழக்கில் ஆகமக் கோயில் பார்ப்பனருக்கு, ஆகமம் அல் லாத கோயில்கள் சூத்திர,பஞ்சமருக்கு எனப் பிரிக்கும் முயற்சிகள் நடக்கிறது.

இதை தமிழ்நாடு அரசு அனுமதிக்க கூடாது. தமிழ்நாட்டு வரலாற்றில் முதல்முறையாக வடநாட்டவர் பலர் அர்ச்சகர் வழக்கில் இணைந்திருப்பது, அதை நீதிமன்றமும் ஏற்றுக் கொண் டிருப்பது என்பதை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. 

இரண்டாவதாக, அரசு கோயில் அனைத்து ஜாதி அர்ச்சகர்களை ஏற்கெ னவே கோயிலில் உள்ள பார்ப்பனர்கள் நடத்தும் விதம் மிக மோசமாக உள்ளது. 100 பார்ப்பனர்கள் இருக்கும் இடத்தில் ஒரு தமிழ் அர்ச்சகரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. எனவே தமிழ்நாடு அரசு உடனே அறிவித்தபடி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை திறக்க வேண்டும். 

அனைத்து ஜாதி மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் கோயில்களில் அர்ச்சகர் பணிநியமனம் நடைபெற வேண்டும். மூன்றாவதாக, எங்களுடன் படித்த 100-க்கும் மேலான மாணவர்கள் அதிமுக அரசின் வஞ்சகத்தால் பணி நியமனம் இன்றி வாடி வருகின்றனர். 

வயது வரம்பைத் தளர்த்தி இவர் களுக்கு உடனே பணிநியமனம் வழங்க வேண்டும். இன்றுவரை மதுரை மீனாட் சியம்மன், திருச்செந்தூர், பழனி முருகன் கோயில்கள், திருவரங்கம் அரங்கநாதன், சென்னை கபாலீசுவரர் கோயில்களில் தமிழ் சமுதாயத்தின் தேவர் , கவுண்டர், யாதவர், வன்னியர், செட்டியார், பிள்ளை, ஆதிதிராவிடர் உள்ளிட்டோர்  கோயில் கருவறையில் நுழைய முடியவில்லை என்பது கடும் வேதனைக்குரியது.

அரசியல் சட்டத்தின் ஆட்சி என்ப தற்கான சவால் இது. எனவே இந்நாளில் சமத்துவ,  சமூகநீதி தமிழ்நாடு முதல மைச்சர் அவர்கள் தமிழ்  மக்கள் பணத் தில் கட்டப்பட்ட கோயில்களில் தமிழர் களை, தமிழை நிலைபெறச் செய்ய வேண்டுகிறோம்.

- வா.ரங்கநாதன் 

தலைவர், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் - தமிழ்நாடு, தொடர்பு எண்: 9047400485

No comments:

Post a Comment