மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது - பாரத் பயோடெக் நிறுவனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 17, 2022

மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது - பாரத் பயோடெக் நிறுவனம்

அய்தராபாத், ஆக. 17- கரோனா வைரசுக்கு எதிரான பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள மூக்கு வழியாக செலுத்தக்கூடிய தடுப்பு மருந்து, கரோனா தடுப்பூசியை போலவே மனிதர்களுக்கு பாது காப்பு வழங்கும் என்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது. 

பிபிவி154 எனும் பெயர் கொண்ட இந்த மருந்தின் மூன்றாம் கட்ட பரிசோதனைகள் நிறைவ டைந்துள்ளன. பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு பதி லாக மூக்கு வழி செலுத் திக்கொள்ளும் மருந்தை உபயோகப்படுத்தலாம். இதற்கான மூன்றாம் கட்ட பரிசோதனை வெற்றியை தந்துள்ளதாக அந்நிறுவ னம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து, மக்கள் பயன்பாட்டுக்காக அனுமதி கோரி அரசிடம் பரிசோதனை முடிவுக ளின் தரவுகள் அனுப்பப் பட்டுள்ளதாக அந்நிறுவ னம் தெரிவித்துள்ளது. 

முதல் டோஸ் தடுப் பூசியாக இந்த மருந்தை எடுத்துக் கொண்டவர்க ளுக்கும், பூஸ்டர் டோஸாக இந்த மருந்தை போட்டுக் கொண்டவர்களும் தடுப்பூசி தரும் அதே அளவு நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து கரோ னாவுக்கு எதிரான பாது காப்பு உடலில் உண்டா கிறது எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது. 

மூக்கு வழி செலுத்திக் கொள்ளும் இந்த மருந்து செலவு குறைந்ததாக வடி வமைக்கப்பட்டு உருவாக் கப்பட்டதால், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் பயனுள்ளதாக இருக்கும் என்று பாரத் பயோடெக் தெரிவித்து உள்ளது. பிபிவி154 என்ற இந்த மருந்து 2.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை யில் பாதுகாத்துக் கொள் ளலாம். மேலும், எளிதாக சேமித்து வைத்துக் கொள் ளலாம், பல பகுதிகளுக்கு கொண்டு சென்று விநி யோகிக்கவும் எளிமையா னதாக வடிவமைக்கப் பட்டுள்ளது. 

அமெரிக்காவின் செயின்ட் லூசியாவில் உள்ள வாசிங்டன் பல் கலைக்கழகத்துடன் இணைந்து இந்த மருந்தை பாரத் பயோ டெக் நிறுவனம் உருவாக் கியுள்ளது. இந்த மருத் துக்கு தேவையான ஆத ரவை மத்திய உயிர் தொழில் நுட்பத்துறையும், அதனு டைய நிறுவனமான உயிர் தொழில்நுட்ப தொழில் ஆராய்ச்சிக் கவுன்சிலும் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment