பொறியியல் கவுன்சலிங்; ஒவ்வொரு ரவுண்டுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 10, 2022

பொறியியல் கவுன்சலிங்; ஒவ்வொரு ரவுண்டுக்கான கட் ஆஃப் எப்படி இருக்கும்?

பொறியியல் கலந்தாய்வில் கடந்த மூன்று ஆண்டு களில் ஒவ்வொரு ரவுண்ட்டுக்கும் எந்த அளவிலான கட் ஆஃப் மதிப்பெண்கள் அழைக்கப்பட்டன என்பதையும், இந்த ஆண்டு கட் ஆஃப் அளவு எப்படி இருக்கும் என்பதையும் இப்போது பார்ப்போம்.

தமிழ்நாட்டில் பொறியியல் சேர்க்கைக்கான நடை முறைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. தற் போது இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு செயல் முறை நடைபெற்று வருகிறது. இதற்கு பின்னர் ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டு, கலந்தாய்வு நடைபெறும்.

இந்த கலந்தாய்வு 4 ரவுண்ட்களாக நடைபெறும். பொறியியல் கலந்தாய்வு நேரடியாக இல்லாமல், ஆன்லைனில் நடைபெறும் நிலையில், மாணவர்கள் கலந்தாய்வின் போது, இருக்கின்ற கல்லூரிகளில் தங்களுக்கு விருப்பமான கல்லூரிகளை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்ய வேண்டும். இந்தக் கல்லூரிகளில் மாணவரின் கட் ஆஃப் மதிப்பெண் களுக்கு ஏற்ப, இட ஒதுக்கீடு செய்யப்படும்.

இதற்காக பொறியியல் கலந்தாய்வு 4 ரவுண்ட் களுக்கு மேலாக நடத்தப்படுகிறது. இந்த 4 கட்ட கலந்தாய்வுகளிலும் குறிப்பிடத்தக்க மாணவர்கள் கலந்துக் கொள்வர். உதாரணமாக முதல் ரவுண்ட் கவுன் சலிங்கில் முதல் 15000 மாணவர்கள் கலந்துக் கொள் ளலாம். இந்த 15000 மாணவர்களில் கடைசி மாணவரின் மதிப்பெண் அந்த ரவுண்டின் கட் ஆஃப் மதிப் பெண்ணாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இப்படியாக 4 ரவுண்ட்களுக்கும் ஒவ்வொரு அளவிலான கட் ஆஃப் மதிப்பெண்களைக் கொண்ட மாணவர்கள் கலந்தாய்வில் அனுமதிக்கப்படுவர்.

இந்தநிலையில், இந்த ஆண்டுக்கான ரேங்க் பட்டி யல் இன்னும் வெளியாகததால் மாணவர்களிடையே இந்த ரவுண்ட்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண் எப்படி இருக்கும் என்ற குழப்பம் இருந்து வருகிறது. இதற்கு தீர்வாக கல்வியாளர் ரமேஷ் பிரபா தனது யூடியூப் பக்கத்தில், கட் ஆஃப் மதிப்பெண்களின் போக்குகளை விளக்கியுள்ளார்.

அதில் கடந்த 3 ஆண்டுகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் அளவுகளை கணக்கில் எடுத்துக் கொண்டு, இந்த ஆண்டில் ஒவ்வொரு ரவுண்ட்க்கான கட் ஆஃப் அளவுகள் கணிக்கப்பட்டுள்ளது.

ரவுண்ட் 1-க்கான கட் ஆஃப் நிலவரம் 2019 ஆம் ஆண்டு : 178 - 200 2020 ஆம் ஆண்டு : 175 - 199.667  2021 ஆம் ஆண்டு : 186 - 200   ரவுண்ட் 2-க்கான கட் ஆஃப் நிலவரம் 2019 ஆம் ஆண்டு : 150 - 177.75 2020 ஆம் ஆண்டு : 145.5 - 174.75  2021 ஆம் ஆண்டு : 174 - 184.995 ரவுண்ட் 3-க்கான கட் ஆஃப் நிலவரம் 2019 ஆம் ஆண்டு : 115 - 149.75 2020 ஆம் ஆண்டு : 111.75 - 145 2021 ஆம் ஆண்டு : 160 - 173.995 ரவுண்ட் 4-க்கான கட் ஆஃப் நிலவரம் 2019 ஆம் ஆண்டு : 77.75 - 114.75 2020 ஆம் ஆண்டு : 77.50 - 111.50 2021 ஆம் ஆண்டு : 77.50 - 159.995 இந்த ஆண்டுக்கு எதிர்ப்பார்க்கப்படும் கட் ஆஃப் ரவுண்ட் 1 : 175-178 - 200 ரவுண்ட் 2 : 145-150 - 174-177 ரவுண்ட் 3 : 111-115 - 145-150 ரவுண்ட் 4 : 77.50 - 111-114

No comments:

Post a Comment