சென்னையில் ஒன்றிய அரசு வேலை; +2, பட்டயம், பட்டம் படித்தவர்களுக்கு வாய்ப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 10, 2022

சென்னையில் ஒன்றிய அரசு வேலை; +2, பட்டயம், பட்டம் படித்தவர்களுக்கு வாய்ப்பு!

சென்னை தேசிய காற்று ஆற்றல் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு, டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஒன்றிய அரசு நிறுவனமான தேசிய காற்று ஆற்றல் நிறுவனம் சென்னையில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உதவி இயக்குநர், இளநிலை பொறியாளர், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப் பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் 17.08.2022க்குள் விண்ணப் பித்துக் கொள்ளலாம்

உதவி இயக்குநர்(ASSISTANT DIRECTOR (FINANCE & ADMINISTRATION))

காலியிடங்களின் எண்ணிக்கை : 1 கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் இளங்கலைப் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 5 வருட பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம் : ரூ. 56,100

நிர்வாக உதவியாளர் (EXECUTIVE ASSISTANT) காலியிடங்களின் எண்ணிக்கை : 2 கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு படித் திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும். ஊதியம் : ரூ. 35,400 இளநிலை பொறியாளர் (JUNIOR ENGINEER)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2  கல்வித் தகுதி : Diploma in Mechanical Engineering/ Computer Engineering / Computer Science / Computer Technology  படித்திருக்க வேண்டும். மற்றும் 2 வருட பணி அனுபவம் அவசியம். வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 35,400

இளநிலை நிர்வாக உதவியாளர்  (JUNIOR EXECUTIVE ASSISTANT) காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். வயதுத் தகுதி : 28 வயதிற்குள் இருக்க வேண்டும். சம்பளம் : ரூ. 25,500 

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் நிரப்பப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://niwe.res.in/careers.php என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் : 17.08.2022

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://niwe.res.in/assets/Docu/recruitment/Advt%20No.02-2022_Asst.Dir(F&A)_EA_JEA_JE.pdf  என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.


No comments:

Post a Comment