‘கடவுள் பார்வதி' அமெரிக்காவில் சிக்கினாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 10, 2022

‘கடவுள் பார்வதி' அமெரிக்காவில் சிக்கினாள்

சென்னை, ஆக. 10- கும்பகோணம் அருகே உள்ள சிவன் கோயிலில் 51 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட அய்ம்பொன் பார்வதி சிலை, அமெரிக்காவில் உள்ள ஏல நிறுவனத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை மீட்கும் முயற்சியில் சிலை கடத்தல்தடுப்பு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழ்நாடு காவல் துறையின் சிலைகடத்தல் தடுப்பு பிரிவில் கே.வாசு என்பவர் கடந்த 2019இல் கொடுத்த புகாரில் கூறியிருந்ததாவது:

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே தண்டந் தோட்டம் நடனபுரீஸ்வரர் கோயிலில் இருந்த 12ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர்கால அய்ம்பொன் பார்வதி சிலைஉள்ளிட்ட 5 சிலைகள் 1971ஆம் ஆண்டு திருடப் பட்டுள்ளன. இதுகுறித்து அப்போதே நாச்சியார்கோவில் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தஞ்சாவூர்மாவட்ட காவல் கண் காணிப்பாளரிடம் பலமுறை புகார் அளித்தும் வழக்குகூட பதிவு செய்யவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி,அய்.ஜி. தினகரனின் நேரடி மேற்பார்வையில் ஆய்வாளர் சித்ரா விசாரணை மேற் கொண்டார். வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்கள், ஏல மய்யங்களில் உள்ளசிலைகள் குறித்து ஆய்வு செய்த தில், காணாமல் போன பார்வதி சிலை, அமெரிக்காவில் உள்ள போன்ஹாம்ஸ் ஏல நிறுவனத்தில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

52 செ.மீ. உயரம் உள்ள இந்த சிலை சுமார் 800 ஆண் டுகளுக்கு முற்பட்டது. யுனெஸ்கோ ஒப்பந்த அடிப்படை யில் அந்த சிலையை மீட்டு மீண்டும் தண்டந்தோட்டம் கோயிலில் ஒப்படைக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சென்னை மாநகரப் பேருந்துகள் தனியார்மயம் இல்லை: போக்குவரத்துத் துறை அமைச்சர்

சென்னை, ஆக. 10- தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:

சென்னை மாநகர பேருந்துகளை தனியாரிடம் வழங்கு வதா? அதை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் அறிக்கை வெளியிட் டுள்ளார். தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் கிராம மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நிறைவான போக்குவரத்து சேவை ஆற்றி வருகிறது. மேலும், சமூக நலன், கல்வி மேம்பாடு, வேலைவாய்ப்பிற்காக அனைத்து மகளிர், மாணவர்கள், மூன்றாம் பாலினர், மாற்றுத் திறனாளிகள், சுதந்திர போராட்ட வீரர்கள் உட்பட பலருக்கு கட்டணமில்லா பேருந்து சலுகையினை வழங்கி வருகிறது. மேலும், அரசு போக்குவரத்துக் கழகங்களில், பேருந்துகளை நவீனமய மாக்கல் உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டு முறைகள் செயல் படுத்தப்பட்டு வருவது என்பது தனியார்மயமாக்கல் அல்ல என்பதையும், அப்படி எந்த நடவடிக்கையும் இல்லை என்பதையும் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன். 

-இவ்வாறு செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment