பாஜக வின் பழங்குடி இன ‘அரசியல்’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

பாஜக வின் பழங்குடி இன ‘அரசியல்’

ஆ.வந்தியத்தேவன்

மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர்

குடியரசுத் தலைவராக திரவுபதி முர்மு அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதை பாராட்டியும், வர வேற்றும் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன. ஏழ்மையானவரை, பெண் இனத்தைச் சேர்ந்தவரை, பழங்குடி பிரிவில் பிறந்தவரை குடியரசுத் தலைவராக தேர்வு செய்த பிரதமர் மோடி அவர் களுக்கு நன்றி தெரிவித்து, பழங்குடி இன மக்கள் என்ற பெயரிலேயே இந்த சுவரொட்டிகள் காட்சி அளிக் கின்றன. இதன் பின்னணியில் பாஜக இருக்கிறது என் பதை எவராலும் மறுக்க முடியாது! இதனை விளம்பரம் செய்து - எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை அறுவடை செய்யத் துடிக்கும் பாஜக வின் ‘அரசியலை’யும் நம்மால் மறக்க முடியாது!

பழங்குடி இன மக்களின் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் சிலைக்கு, மோடியும், அமித் ஷாவும் ஓடோடிச் சென்று மாலை அணிவித்தார்கள்; இவரது பிறந்த நாளை பழங்குடிகள் கவுரவ நாளாக அறிவித்தார்கள்; பழங்குடி இன மக்களின் வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் மதிய உணவு சாப்பிட்டார்கள். பழங்குடி இன மக்கள் மீது பாஜக திடீர் பாசமும், பரிவும் காட்ட காரணம் என்ன?

நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தான் இதற்குக் காரணம்; பழங்குடி இன மக்கள் கணிசமாக நிறைந்துள்ள மாநிலங்களில் பாஜக சந்தித்த இமாலய தோல்விதான் பெரிதும் காரணம்! ஜார்க்கண்ட் மாநிலத்தில் 28 ரிசர்வ் தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, இரண்டே இரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 29 ரிசர்வ் தொகுதிகள் கொண்ட சத்தீஷ்கர் மாநிலத்தில் மூன்று தொகுதிகளிலும், 47 ரிசர்வ் தொகுதிகள் கொண்ட மத்திய பிரதேசத்தில் 16 தொகுதிகளிலும் மட்டுமே பாஜக வெற்றிபெற முடிந் தது. பழங்குடி இன மக்கள் பாஜகவை புறக்கணித்ததற்கு, பாஜக அரசின் நடவடிக்கைகளே பெரிதும் காரணமாயின. பாஜகவின் கார்ப்பரேட் ஆதரவுப் போக்கினால், பழங்குடி இன மக்கள் வஞ்சிக்கப்பட்டு வேதனைத் தீயில் வெந்து மடிந்தார்கள்.

வன உரிமைகள் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட தால் 45 லட்சம் பழங்குடி இன மக்கள் பாதிக்கப்பட்டார் கள். வாழ்விடங்களை விட்டு அவர்கள் வெளி யேற்றப் பட்டார்கள்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில், பழங்குடி இன மக்களின் நிலம் சார்ந்த உரிமை பாதுகாப்பு என்ற பெயரில் அரசு எடுத்த நடவடிக் கைகள் அந்த மண்ணின் மைந்தர் களை பெருந்துயரில் மூழ்கடித்தது. கோட்டானாக்பூர் குத்தகை சட் டம், கந்தல் பர்கானா குத்தகை சட்டம், ஆகியவைகளில் அரசு செய்த திருத்தங்கள், அவர்களுக்கு பெரும் கேடு விளைவித்ததால், இதனை எதிர்த்து பழங்குடி இன மக்கள் வீதிக்கு வந்து கடுமையாக போராடினார்கள்.

ஏற்கெனவே உள்ள சட்டங்கள் பெயரளவில் காகிதத்தில் மட்டுமே உள்ளதால், வஞ்சிக்கப்படும் பழங்குடி இன மக்கள் வாழ்வுரிமை மறுக்கப்பட்டு புறக்கணிக்கப்பட்டார்கள். வன உரிமை கள் சட்டம் நிறைவேற்றப்பட்டு 16 ஆண்டுகள் உருண் டோடிய பின்னரும், தேசிய அளவில், 50.4 விழுக்காடு விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே நிலப்பட்டா வழங்கப்பட்டது. 30ஆண்டுகளாக பாஜக ஆட்சி நடக்கும் குஜராத் மாநிலத்தில் 49 விழுக்காடு முறை யீட்டாளர்களுக்கு இன்னும் நிலப்பட்டா அளிக்கப்பட வில்லை. மத்திய பிரதேசம், வடமேற்கு மகாராஷ்டிரம், ஆந்திரா, சத்திஷ்கர், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் வாழும் பழங்குடி இன மக்க ளுக்கும் இதே நிலைதான். நிலப்பட்டா இன்னும் வழங் கப்படாததால், எந்த நேரமும் அங்கிருந்து வெளியேற் றப்படலாம் என்ற அச்சத்துடன்தான் அவர்கள் வாழ் நாளை கழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

பழங்குடியினர் நலனுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதி லும் பாஜக அரசு துரோகம் இழைத்து வஞ்சித்து வரு கிறது. 2017 ஆம் ஆண்டின் ‘நிட்டி ஆயோக்’ பரிந்து ரைப்படி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 15.49 விழுக்காடும், பழங்குடி மக்களுக்கு 8.2 விழுக்காடும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். ஆனால் ஒதுக்கப்படுகிற நிதி இதற்குக் குறைவாக உள்ளது. 2018-2019 நிதி ஆண்டில் 4.9 விழுக்காடு, இந்த ஆண்டு 7.3 விழுக்காடு என ஒதுக்கப்பட்ட அளவை விட குறைவான நிதியையே அரசு அறிவித்துள்ளது.

கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி என்பது அனைத்துப் பிரிவு மாணவர்களுக்குமான பொதுவான ஒதுக்கீடாக இருப்பதால், பழங்குடி இன மாணவர்களின் கல்வி, அடிப்படைத் தேவைகள் முதலானவை இன்னமும் கானல் நீராகவே ஏமாற்றம் அளிக்கிறது.

பழங்குடி இன மக்கள் மீதான வன்செயல்கள், தாக்குதல்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. 2020 ஆம் ஆண்டில் மட்டும் பழங்குடியினர் மீதான தாக்குதல் தொடர்பான 8272 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பக தகவல் அறிவிக்கிறது. சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்திலும், வன்கொடுமை, கொலை, தாக்கி காயம் ஏற்படுத்துதல் முதலான குற்றச் செயல்கள் பழங்குடியினர் மீது கட்டவிழ்த்து விடப்படுவதாக, இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த 5 ஆண்டு களில் இத்தகைய வன் கொடுமைகள் வளர்ந்து வருவ தையே இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி பி.எஸ்.கிருஷ்ணன் அவர் களின் ஆட்சிப் பணியின் மாட்சிமையை விளக்கும் ‘சமூக நீதிக்கான அறப்போர்’ என்ற புத்தகமும், பழங்குடி இன மக்களின் அவல வாழ்க்கையை விரிவாக விளக்கி பதிவு செய்துள்ளது.

“பழங்குடி மக்களிடையே பெரிய அளவில் விழிப்புணர்வை உருவாக்குகின்ற பெரிய அளவில் அவர்களை அணி திரட்டுகின்ற செயல்பாடுகள் மெதுவாகவே நடைபெறுகின்றன. குறிப்பாக கோண்ட், பில், சந்தால், முண்டா, ஓரான், கோயா உள்ளிட்ட பெரிய பழங்குடி இனங்களிலும் அப்படித்தான். இந்தியாவின் பழங்குடி மக்கள் தொகையில் இந்த பழங்குடி இனங்கள்தான் கணிசமானவர்கள். அரசு வேலைகளுக்கு முயன்று தேர்வு பெறுகிறவர்களில் அத்தகைய பெரிய பழங்குடி இனங்களை சார்ந்தவர் களைக் கூட பார்க்க முடியவில்லை (பக்கம் 249)” என்ற இந்நூலின் வரிகள், பழங்குடி இன மக்களுக்கு சமூக நீதியும், சம வாய்ப்பும் அறவே கிட்டவில்லை என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது.

இந்தக் கொடுமை இன்று நேற்று என்றில்லாமல் நூற்றாண்டுகளாகத் தொடர்கிறது என்பதையும் இந் நூல் அம்பலப்படுத்துகிறது. “பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினராக மாறிய முதல் இந்தியரும், காங்கிரஸ் இயக்கத்தை உருவாக்கிய மூன்று நிறுவனர்களில் ஒருவருமான தாதாபாய் நவுரோஜி (1825 - 1817) அவர்கள் வறுமையும் இந்தியாவில் ஆங்கிலேயத் தன்மை இல்லா ஆட்சியும் (1901) (றிஷீஸ்மீக்ஷீtஹ் ணீஸீபீ ஹிஸீ-தீக்ஷீவீtவீsலீ க்ஷீuறீமீ வீஸீ மிஸீபீவீணீ) என்ற நூலை எழுதி யுள்ளார். அதில் எவ்வாறு ஆங்கிலேயர்களின் காலனி ஆட்சி இந்தியாவின் வன வளங்களை ஒட்டச் சுரண்டியது என்பதை விளக்கி இருக்கிறார். அத்தகைய அதிர்ச்சிகரமான சுரண்டலுக்கு குறையாத அளவில், சுதந்திர இந்தியாவின் வளங்களும் சுரண்டப்படு கின்றன” என்ற கருத்து (பக்கம் 251) இதனைத்தான் சான்றுடன் விளக்குகிறது.

இந்தக் கொடுமைக்கு தீர்வு காண நடவடிக்கைகளை மேற்கொண்ட, நேர்மையான அரசு அலுவலர்கள் எப்படியெல்லாம் பழிவாங்கப்பட்டார்கள் என்பதையும் இந்நூல் அடையாளம் காட்டுகிறது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுப்பையன் என்ற ஆதி திராவிட சமுதாயத்தைச் சேர்ந்த அரசு பணியாளர் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தின் சார்பு ஆட் சியராக பணியாற்றினார். பழங்குடி மக்களின் நிலங்கள் சட்ட விரோதமாக, மற்றவர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதை கண்டறிந்து சட்டத்தின் துணை கொண்டு இந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைக்க அவர் பாடுபட்டார். ஆக்கிரமிப்பாளர்கள் இதனை எதிர்த்து கலவரத்தில் ஈடுபட்டார்கள்.

அரசு நிகழ்ச்சியில் அந்த அதிகாரி கலந்து கொண்டபோது, ஆக்கிரமிப்பாளர்களின் பெண்கள் அந்த சார்பு ஆட்சியரை சூழ்ந்து கொண்டு கூச்ச லிட்டார்கள். அவருடைய உடைகளையும் கிழித்து எறிந்தார்கள்.

இந்த நிலையில் அவருக்கே பாதுகாப்பு இல்லை. அதைவிடக் கொடுமை, அவரை கேலி செய்யும் வகையில் அந்த மாநில முதல் அமைச்சரே பேசினார், “வரலாற்றை சுப்பையா படிக்கவில்லை. அதனால், பெண்கள் அவருடைய உடையை கிழித்தார்கள்” என்ற முதலமைச்சரின் அகம்பாவமான பேச்சினை, ‘எந்த இடத்தில்’ எதை எப்படி பேச வேண்டும் என்பதை அறியாத பேச்சாக இருந்தது. மாநில முதல் அமைச்சர் அந்த இளம் சார்பு ஆட்சியரை ஆதரிக்க வில்லை. பழங்குடி இன மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கிற அவருடைய நடவடிக்கைகளை பாராட்ட வில்லை. அவர் தனது பணிகளை தொடர்வதற்கான பக்கபலமாகவும் முதல் அமைச்சர் இருக்கவில்லை’ (பக்கம் 241) என்று இந்த நூல் கவலையுடன் கோடிட்டுக் காட்டுகிறது.

1975 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத்தில், பழங் குடி இன மக்களின் நிலங்கள் உரிமை மாற்ற கட்டுப் பாடுகள் மற்றும் மாற்றப்பட்ட நிலங்கள் மீட்டெடுத்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நடை முறைக்கு வருவதாற்கு முன்பாகவே, சட்ட திருத்தம் செய்து பழைய சட்டத்தை செயலிழக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. வெவ்வேறு கட்சிகளின் இரண்டு முதல்வர்களும், பழங்குடி இன மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதில் ஒன்றுபட்டு நின்ற வரலாற்றுக் கொடுமையையும் இந்த நூல் சான்று காட்டி விளக்குகிறது.

1999 ஆம் ஆண்டு டிசம்பர் 5 முதல் 7 ஆம் தேதி வரை, அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மற்றும் பழங்குடியினராக உள்ள நாடாளு மன்ற உறுப்பினர்களையும் கொண்ட ஓர் தேசிய மாநாட்டை அன்றைய ஒன்றிய அரசு தலைநகர் டில்லி யில் கூட்டியது. தாழ்த்தப்பட்ட ஜாதியினர் - பழங்குடிகளின் ஒவ்வொரு பிரச்சினைகளையும், அடையாளம் கண்டு செயல்திட்டத்தை வகுப்பதுதான் அந்த மாநாட்டின் நோக்கம். அந்த மாநாட்டில், அப்போதைய சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானி, “சுதந்திரத்திற்குப் பிறகு, பாதிக்கப்பட்ட அம்மக்களின் பிரச்சினைகளை தீர்ப்ப தில் ஏறக்குறைய முழுமையாக தோல்வி அடைந்து விட்டோம்” என்று வெளிப்படையாகவே பேசினார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளில், 24 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளில் ஒருவர் கூட தாழ்த்தப்பட்ட ஜாதியினர் அல்லது பழங்குடியினர் இல்லை என்பதை யும் பிற்படுத்தப்பட்ட மற்றும் பெண் நீதிபதிகள் எண் ணிக்கை என்பது பெயரளவுக்குத்தான் உள்ளது என்ப தையும் சமூக நீதிக் கண்ணோட்டத்தில் நாம் கவனிக்க வேண்டும்.

அரசியல் சாசனத்தின் செயல்பாடு களை பரிசீலிக்கும் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட முன்னாள் தலைமை நீதிபதி வெங்கடசெல்லையா தலைமையிலான தேசிய ஆணையம் 2002 ஆம் ஆண்டில் வெளியிட்டுள்ள அறிக்கை, “தாழ்த்தப்பட்ட ஜாதியினர், பழங் குடிகள், பிற்படுத்தப்பட்ட பிரிவினர், குறிப்பாக அவர்களின் மத்தியில் உள்ள பலவீனமான ஜாதிகள், சிறுபான்மை யோரில் உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகங் கள், மேலே சொல்லப்பட்டோரில் உள்ள பெண்கள், முற்பட்ட ஜாதிப்பெண்கள் ஆகியோரில் தேவையான தகுதிகள் உள்ளவர்களை நீதிபதிகளாக நியமனம் செய்தால், அது நீதித்துறைக்கு பயனளிக்கும்” என்று பரிந்து ரைத்ததே அது இன்று வரை நடைமுறைக்கு வராத போது, சமூக நீதி எப்படி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கும்?

பழங்குடி இன மக்களின் பாதிப்புக்கள் காலம் தோறும் தொடர்ந்திடும் நிலை குறித்து கவலைப் படாமல், திரவுபதி முர்மு அவர்களை குடியரசுத் தலைவராக்கி விடுவதால், அதுவே சர்வரோக நிவாரணியாக பயன் தந்துவிடுமா? புரையோடிப்போன புண்ணுக்கு மேம்போக்காக புணுகு பூசுவதால் காயம் ஆறிப்போகுமா?

இதனை நாம் கேட்பது மட்டுமல்ல, ழிமீஷ்s நீறீவீநீளீவீஸீ என்ற இணையதளமும் கேட்கிறது.

“பாஜக தனது வாக்கு வங்கியை பெருக்கவும், அரசியல் லாபத்திற்காகவும் அடையாள அரசியலை மேற்கொள்வதில் எந்த தயக்கமும் காட்டுவதில்லை. அப்துல்கலாமும், ராம்நாத் கோவிந்தும் இஸ்லாமிய, தாழ்த்தப்பட்ட மக்களைக் கவர குடியரசுத் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இவர்கள் பதவிக் காலத்தில் இஸ்லாமியர்களோ, பிற சிறுபான்மை யினரோ, தாழ்த்தப்பட்ட சமூக மக்களோ, தங்கள் வாழ்வில் எந்த முன்னேற்றத்தையும் உணரவில்லை. மாறாக அதிகப்படியான தாக்குதல்களையும், இன்னல் களையுமே சந்தித்தனர். இவ்விருவர்களின் வரிசையில் இப்போது திரவுபதி முர்முவும் இணைந்துள்ளார். எப்போதும் போல பாஜகவின் அரசியல் நாடகமே பழங்குடியின குடியரசுத் தலைவர் தேர்வு!” என்று அந்த இணையதளம் தெரிவித்துள்ளது நூற்றுக்கு நூறு உண்மை அல்லவா?

இதுதான், பாஜகவின் பழங்குடி இன ‘அரசியல்!’.

- நன்றி: ‘சங்கொலி‘, 12.8.2022


No comments:

Post a Comment