ஒடிசாவில் காட்டு விலங்காண்டித்தனம் மாற்றுத்திறனாளி மீதான வன்கொடுமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

ஒடிசாவில் காட்டு விலங்காண்டித்தனம் மாற்றுத்திறனாளி மீதான வன்கொடுமை

மயூர்பஞ்ச், ஆக. 11- ஒடிசாவின் மயூர்பஞ்ச் பகுதியில் மாற்றுத்திறனாளி ஒருவரை இரண்டு பேர் சித்திரவதை செய்யும் காட்சிகள் வெளி யாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

அந்த காட்சிகளில் ஒரு நபர் தடியுடன் தோன்றுகிறார். அவர் ஒரு மாற்றுத்திறனா ளியை மிரட்டி மற்றொருவ ரின் கால்களை வாயால் சுத் தம் செய்ய வற்புறுத்துகிறார். அவர் மறுக்க, பின்னர் தலை முடியை பிடித்து அவர்களே அவரை சுத்தம் செய்ய வைக் கின்றனர். அப்படி சுத்தம் செய்த பின்னரே அந்த மாற் றுத்திறனாளியை விடுவிக்கின்ற னர். இதன்பிறகு அந்த மாற் றுத்திறனாளி தரையில் அமர்ந்து அழுகிறார். இடை யில் இருவரும் அந்த மாற் றுத்திறனாளியை மிரட்டுகின் றனர். அவர்களுக்கு பின்னர் சிலர் அமைதியாக பயந்தபடி நிற்கின்றனர்.

இந்த காட்சிப்பதிவுகள் வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறிதுநேரத்தில் இது ட்ரெண்ட் ஆக, கண்டனங்கள் குவிந்தன. மயூர்பஞ்ச் காவல் துறை இதில் சம்பந்தப்பட்ட வர்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக் கைகள் எழுந்தன. இதன் பின் நடந்த விசாரணையில் இது ஒரு போதைப்பொருள் ஒழிப்பு மய்யத்தில் நடந்த சம்பவம் என்பது தெரியவந்து உள்ளது.

இந்த சம்பவம் தொடர் பாக வழக்குப் பதிந்துள்ள காவல்துறை அதிகாரிகள், மாற்றுத்திறனாளியை இழிவு படுத்திய இருவரை தேடிவரு கின்றனர். இதுதொடர்பாக மயூர்பஞ்ச் எஸ்பி பதிவிட் டுள்ள டுவீட்டில், "இது தொடர் பாக நாங்கள் முறையாக வழக் குப் பதிவு செய்துள்ளோம். மேலும் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவோம். இந்த போதை ஒழிப்பு மய்யங்களை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வரு கின்றனர்" என்றுள்ளார்.

No comments:

Post a Comment