ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பல்கலைகளில் 6,500 காலி பணியிடங்களை நிரப்பாதது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 1, 2022

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பல்கலைகளில் 6,500 காலி பணியிடங்களை நிரப்பாதது ஏன்?

புதுடில்லி, ஆக.1 நாடு முழுதும் உள்ள ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பல்கலைகளில் 6,549 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 52 இடங்கள் காலியாக உள்ளன.

நாடு முழுதும் 43 ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பல்கலைக் கழகங்கள் உள்ளன. இதில் மொத்தம், 6,549 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், எஸ்.சி., பிரிவினருக்கான 988 இடங்கள், எஸ்.டி., பிரிவின ருக்கான 576 இடங்கள், ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட் டோர் பிரிவினருக்கான 1,761 இடங்களும் அடங்கும்.தமிழ்நாட் டில் உள்ள மூன்று பல்கலைகளில், 52 இடங்கள் காலியாக உள்ளன. அதே நேரத்தில் ஆந்திராவில், அய்ந்து இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.

தென் மாநிலங்களில் தெலுங் கானாவில் 304, புதுச்சேரியில் 156, கருநாடகாவில், 94, கேரளாவில் 83 இடங்கள் காலியாக உள்ளன. புகழ் பெற்ற பல்கலைகளில் புது டில்லி பல்கலையில் 900 இடங்கள் காலியாக உள்ளன. அலகாபாத் பல்கலையில் 622, பனாரஸ் ஹிந்து பல்கலையில் 532, அலிகர் முஸ்லிம் பல்கலையில் 498, புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில் 326 இடங்கள் காலியாக உள்ளன.

பணி ஓய்வு, பணி விலகல், மாணவர் சேர்க்கை அதிகரிப்பால் கூடுதல் தேவை போன்ற காரணங் களில், ஆசிரியர் பணியிடங்களால் அதிக அளவில் காலியாக இருப்ப தாக கூறப்படுகிறது.இந்தப் பணியிடங்களை நிரப்புவதை ஓர் இயக்கமாக மேற்கொள்ளும்படி, ஒன்றிய கல்வி அமைச்சர் தர் மேந்திர பிரதான் உத்தரவிட்டார். கடந்த 2021, செப்., 5இல் இருந்து ஓர் ஆண்டுக்குள் நிரப்ப உத்தரவிட்டார்.

கடந்த ஆக.,இல் 4,807 பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் பட்டன. அந்த விண்ணப்பங்கள் தற்போது பரிசீலனையில் உள்ளன. சில வழக்குகளால், பணி நியமனம் தாமதம் அடைந்துள்ளது.இதை விட பல முக்கிய ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பல்கலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களை, தனி யார் பல்கலை.கள் வளைத்துள்ளன. அதிக ஊதியம், வசதிகள், நிரந்தரப் பணி போன்ற காரணங்களால், தனியார் பல்கலைக்கு ஆசிரியர்கள் சென்றுள்ளனர்.

இதற்கிடையே, ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் பல்கலை களில் துறைகளுக்குள் நடக்கும் அரசியல், சிலருக்கு மட்டும் சலுகைகள் காட்டுவது, அரசியல் பின்புலம் போன்ற காரணங்களால், நல்ல ஆசிரியர்கள் தனியார் பல் கலை.க்கு செல்வதையே விரும்பு கின்றனர்.தற்காலிகமாக பணியில் சேர்க்கப்பட்டுள்ளோரும், பணி நிரந்தரம் செய்யப்படாததால், தனி யார் பல்கலை.களையே விரும்பு கின்றனர். இதனால், ஒன்றிய பல் கலைகளின் காலியிடங்களை நிரப் புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


No comments:

Post a Comment