பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் அதிர்ச்சியோ, அதிர்ச்சி 100க்கு 151 மார்க் எடுத்தாராம் ஒரு மாணவர் சுழியம் எடுத்தவர் வெற்றியாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 1, 2022

பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் அதிர்ச்சியோ, அதிர்ச்சி 100க்கு 151 மார்க் எடுத்தாராம் ஒரு மாணவர் சுழியம் எடுத்தவர் வெற்றியாம்

பாட்னா, ஆக.1 பீகார் மாநிலத்தில் பல்கலை ஒன்றின் மாணவர் அரசியல் பாடப் பிரிவில் 100க்கு 151 மார்க்குகள் எடுத்துள்ளார். இது அச்சுப் பிழை காரணம் என பல் கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.

பீகார் மாநிலம் தர்பங்கா மாவட் டத்தில் உள்ளது லலித்நாராயண் மிதிலா பல்கலைகழகம். இந்த பல் கலை கழகத்தில் ஹானர்ஸ் இளங் கலைப் பிரிவு மாணவர் ஒருவர் அரசியல் பாடத் தேர்வை எழுதி னார். இதில் அவர் 100க்கு 151 மதிப் பெண்கள் பெற்றுள்ளார். இந்த மதிப்பெண் வித்தியாசம் குறித்து மாணவர் கூறுகையில் இவை தற் காலிக மதிப்பெண் பட்டியல் என்ற போதிலும் கடைசி நேரத்திலாவது அதிகாரிகள் மதிப்பெண் பட்டி யலை சரி செய்து இருந்திருக்கலாம் என தெரிவித்தார். இதே பல்கலை கழகத்தைச் சேர்ந்த பி.காம் மாணவர் ஒருவர் கணக்கு மற்றும் நிதித்தாள் தேர்வில் பூஜ்யம் மதிப்பெண் பெற் றுள்ளார். இருப்பினும் அவர் அடுத்த கட்டத் தரத்திற்கு உயர்த்தப் பட்டு உள்ளார். இதைக் கண்டு பிடித்த மாணவர் தவறை சுட்டிக் காட்டியதை அடுத்து அவருக்கு சரியான மதிப்பெண் பட்டியலை பல்கலை. நிர்வாகம் வழங்கி உள்ளது.

இந்நிகழ்வு குறித்து பல்கலைகழ கத்தின் பதிவாளர் முஷ்டாக் அகமது கூறுகையில்: மேற்கண்ட இரண்டு மதிப்பெண் தாள்களிலும் தட்டச்சுப் பிழைகள் இருந்தன. அவை கண்டுபிடித்த பிறகு சரியான மதிப்பெண் சான்றிதழ் வழங்கப் பட்டு விட்டன. இவைகள் வெறும் அச்சு பிழை மட்டுமே வேறு காரணங்கள் ஒன்றும் இல்லை என தெரிவித்தார்.


பி.பார்ம், செவிலியர் படிப்புகளில் சேர   

12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் 

சென்னை,ஆக.1- செவிலியர், பி.பார்ம் உள்ளிட்ட படிப்புகளுக்கு மாண வர்கள் இன்று முதல் விண்ணப் பிக்கலாம் என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. சென்னை, செவிலியர், பி.பார்ம் உள் ளிட்ட மருத்துவ துணைப் படிப்பு களுக்கு மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று மருத் துவக் கல்வி இயக்ககம் அறிவித் துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் இதற்கு விண் ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது. இந்த படிப்புகளில் சேர விரும்புபவர்கள் www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org  எனும் அதிகாரப்பூர்வ இணைய தளம் மூலமாக மாணவர்கள் விண் ணப்பிக்க வேண்டும் என்றும், வரும் 12ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் மருத் துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment