ஆடர்லி முறை: 4 மாதங்களில் ஒழிக்கப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் ஆணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

ஆடர்லி முறை: 4 மாதங்களில் ஒழிக்கப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் ஆணை

சென்னை, ஆக.25- ஆடர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஆடர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை தலைமை இயக் குநருக்கு சென்னை உயர் நீதிமன் றம் உத்தரவிட்டுள்ளது. உயரதி காரிகளுக்கு தேவைப்பட்டால் அலுவலக உதவியாளர் அல்லது இருப்பிட உதவியாளர் போன்ற பணியை உருவாக்கலாம் என அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

புதிய பணிகளை உருவாக்க தமிழ்நாடு அரசுக்கு, காவல்துறை தலைமை இயக்குநர் பரிந்துரை வைக்கலாம் என்றும் காவலர் குடியிருப்பில் சட்டவிரோதமாக தங்கியிருப்போரை கண்டறிந்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண் டும் எனவும் தெரிவித்துள்ளனர். மேலும், எந்த பணிக்காக நியமிக் கப்பட்டார்களோ அந்த பணியை மட்டும் வழங்கி அரசமைப்பு சட்ட உரிமையை நிலை நாட்ட வேண் டும் என்றும் கூறியுள்ளார்.

ஏற்கெனவே, ஆடர்லி தொடர் பான வழக்கில் கடுமையான அதி ருப்தியை நீதிமன்றம் வெளிப்படுத்தி இருந்தது. இதன்பின் தேவை இல் லாமல் இருக்கும் ஆடர்லிகளை திரும்ப அனுப்ப காவல்துறை தலைமை இயக்குநரும் நடவடிக்கை மேற்கொண்டு இருந்தார்.

இந்த நிலையில், ஆடர்லி முறையை 4 மாதங்களில் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. ஆடர்லிகள் பயன் படுத்தப்படுவதாக புகார் வந்தால் விசாரணை நடத்தி தகுந்த நடவ டிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.

No comments:

Post a Comment