பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் முன் தேதியிட்டு அமலாகாது! உச்சநீதிமன்றம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 25, 2022

பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் முன் தேதியிட்டு அமலாகாது! உச்சநீதிமன்றம்

புதுடில்லி, ஆக. 25- பினாமி பரிவர்த் தனை தடை சட்டம் முன் தேதி யிட்டு அமலாகாது என  உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

ஒன்றிய பாஜக அரசு, கடந்த 2016ஆம் ஆண்டு பினாமி பரிவர்த் தனை தடை சட்டம் கொண்டு வந் தது. இந்த சட்டம் நாடாளுமன் றத்தில் கடந்த 2016 ஆகஸ்ட் மாதம்   நிறைவேற்றப்பட்டது. அதைய டுத்து,  பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் 2016 நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.  இந்த சட்டத்தின்படி, பினாமி பெயரில் சொத்து வாங்கினால், அவர்களின் சிறைத் தண்டணை  7 ஆண்டுகள் என அதிகரிக்கப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பினாமி சட்டத்தை அமல்படுத்த தடை விதித்தது. இதை எதிர்த்து ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை தலைமைநீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு விசா ரணை நடத்தி வந்தது. பல கட்ட விசாரணைக்கு பிறகு, நேற்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

பினாமி சட்டத்தை பின்னோக் கிப் பயன்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.  இந்த  2016 திருத்தச் சட்டத்தின் பிரிவு 3 அரசமைப்பிற்கு முரணா னது என்று கூறிய நீதிமன்றம்,  2016 சட்டத்தின் வருங்கால விளைவு மட்டுமே உள்ளது என்றும், இத னால், திருத்தத்திற்கு முன் எடுக்கப் பட்ட அனைத்து நடவடிக்கைக ளும் ரத்து செய்யப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியது.

மேலும் சட்டத்தில் உள்ள பிரிவு 3இல் உள்ள சரத்துபடி, எந்தவொரு பினாமி பரிவர்த்தனை யிலும் ஈடுபடும் எந்தவொரு நபரும் மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண் டிக்கப்படுவார் என்று கூறுகிறது. இது “அரசமைப்புக்கு எதிரானது” என்று கடுமையாக சாடிய உச்ச நீதிமன்றம், சட்டத்தின் பிரிவு 3அய் ரத்து செய்ததுடன், பினாமி பரிவர்த்தனை தடை சட்டம் 2016 நவம்பர் 1ஆம் தேதிக்கு முன் தேதியிட்டு அமலாகாது என்றும் தெரிவித்து உள்ளது.

No comments:

Post a Comment