ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல்,சென்னை:

மதுரை காமராசர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா. ஆளுநரின் தன்னிச்சையான போக்கைக் கண்டித்து தமிழ்நாடு உயர் கல்வி அமைச்சர் முனைவர் க.பொன்முடி புறக்கணிக்க முடிவு.

நாடாளுமன்ற கட்டடத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்த பிரமாண்ட தேசிய சின்னத்தில் ஆக்ரோஷமான சிங்கங்கள்: பழைய சிங்கம் போல் இல்லை; எதிர்க்கட்சிகள் கண்டனம்

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

 ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தவிர்த்து அனைத்து பொதுத்துறை வங்கிகளையும் (PSB) தனியார்மயமாக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு  தேசிய பயன்பாட்டு பொருளாதார ஆராய்ச்சி கவுன்சில் (NCAER)  இயக்குநர் ஜெனரல் பூனம் குப்தா மற்றும் அரவிந்த் பனகாரியா - கொலம்பியா பல்கலைக்கழக பேராசிரியர் மற்றும் நிதி ஆயோக்கின் மேனாள் துணைத் தலைவர் ஆகியோர் அறிக்கை அளித்துள்ளனர்.

ஒரே மாதிரியான நம்பிக்கையின்படி பிஜேபியின் கதையை எதிர்க்க அனைவரும் பயப்படுகிறார்கள் என்பதற்காக நான் மதத்தைப் பற்றி சுற்றி வளைத்துப் பேச முடியாது. எனது கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்தரா பேச்சு.

தேசிய சின்னமான சிங்க முகப்புடன் கூடிய சின்னம் பெரிதும் மாற்றப்பட்டுள்ளது என சிற்பி கருத்து.

தி டெலிகிராப்:

நீதிபதிகள் நியமனத்தில் நீதித்துறையை மிரட்டி, கவிழ்க்க நரேந்திர மோடி அரசு முயற்சிப்பதாக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி குற்றச்சாட்டு.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment