மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 13, 2022

மறைவு

மதுரை மாநகர் மாவட்ட கழகத் தோழர் ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர் மு.கனி (வயது 59) இயற்கை எய்தினார். மதுரை சின்னக்கண்மாய் பகுதியில் வாழ்ந்த தோடு அனுப்பானடி பகுதிதோழர்களோடு இணைந்து கழகப் பணியாற்றியவர். தலைமைக்கழகம் கொடுக்கும் பணி களை தவறாமல் செய்யும் உற்ற தோழர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மதுரைக்கு வருகை தரும் போதெல்லாம் புதிய தலைப்புகளில் புத்தகங்களை வழங்கி மகிழக்கூடியவர். உடல்நலம் சற்று குன்றியிருந்து நலம் பெற்று பணியாற்றி வந்தவர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக 11.7.2022 அன்று அதிகாலை 1.30மணிக்கு காலமானார் என்பதை வருத்தத்துடன் தெரியப்படுத்திக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment