இன்றைய தி.மு.க. ஆட்சி நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ''திராவிட மாடல் ஆட்சி!'' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 4, 2022

இன்றைய தி.மு.க. ஆட்சி நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ''திராவிட மாடல் ஆட்சி!''

இந்தியாவிலேயே கல்வி, வேலை வாய்ப்புகளில் பெண்கள் முதலிடத்தில் இருப்பது தமிழ்நாடே!

வயிற்றெரிச்சல்காரர்கள் தி.மு.க. ஆட்சியின் இந்த சாதனைகளைப் பார்த்தாவது திருந்தட்டும்!

இந்தியாவிலேயே கல்வி, வேலை வாய்ப்புகளில் பெண்களின் எண் ணிக்கை தமிழ்நாட்டில் 7,08,026; குஜராத்தில் 51,814; எது சிறந்தது?  திராவிட மாடல் அரசா? குஜராத் மாடல் அரசா? என்ற வினாவை எழுப்பியுள்ளார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 

அவரது அறிக்கை வருமாறு:

‘திராவிட மாடல்' ஆட்சி என்ற தமிழ் நாட்டின் தனிப்பெருமை பெற்று சமூகநீதிக் கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தலைமையில், கடந்த ஓராண்டாக - மக்களின் அமோக ஆதரவுடன் நடைபெற்றுவரும் திராவிடர் ஆட்சி என்பது 1920 முதல் உருவான நீண்ட நெடிய, வரலாற்றை தன்னகத்தே கொண்டது என்பதால், இப்போது உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்களின் ஆய்வாளர்கள் ‘திராவிட மாடல்' ஆட்சியின் மாண்புகள்பற்றி சிறப்பான நூல்களை எழுதி வருகிறார்கள்.

ஒருவகை ‘ஒவ்வாமை' அவர்களைப் பிடித்தாட்டுகிறது!

மறைக்கப்பட்ட மொகஞ்சதாரோ - அரப்பா புதைவெளியிலிருந்து வெளியே வந்த சிந்துவெளி நாகரிகம் என்ற திராவிடர் நாகரிகத்தினை எப்படி ஆய்வுக்குட்படுத்த சர்ஜான் மார்ஷலும், கிரேக்க நாட்டு பாதிரி யார் ஹீராஸ் அவர்களும் அதனைத் தொடர்ந்து பல்வேறு வரலாற்று ஆய் வாளர்களும், புதைபொருள் ஆய்வு நிபு ணர்களும் அக்காலத்திலேயே ஏற்பட்ட நாகரிகத்தின் முன்னோடியாக திராவிடர் நாகரிகம் அமைந்தது என்பதை எடுத்துக் காட்டி வருகின்றனர். ஆனால், இன்னமும் கூட பலருக்கு ‘திராவிடர் நாகரிகம்' என்று அதனை அழைக்க மனமில்லாத ஒருவகை ‘ஒவ்வாமை' அவர்களைப் பிடித்தாட்டுகிறது!

அதுபோலத்தான் இந்த ‘திராவிட மாடல்' ஆட்சி என்ற ஒப்பற்ற பொற்கால ஆட்சியின் பெயரை உச்சரிக்க மனமின்றி, புரியாதவர் களைப்போல வேஷம் போடுகிறார்கள்!

நீதிக்கட்சி ஆட்சி என்ற அன்றைய 

திராவிட மாடலான முதற்கட்ட தொடக்க ஆட்சி!

1920 இல் பிரிட்டிஷ்காரர்கள் அதிகாரத் தைக் குவித்து வைத்து ஒரு சில அதிகாரங் களை மட்டுமே மாகாணங்களுக்கு வழங்கிய அந்த நிலையில்கூட, அருமையாக வர லாற்றில் முத்திரைப் பதித்த சாதனைகளை செய்தது நீதிக்கட்சி ஆட்சி என்ற அன்றைய திராவிட மாடலான முதற்கட்ட தொடக்க ஆட்சி.

1921  (ஏப்ரல் 1) ஆம் ஆண்டிலேயே பெண்களுக்கு வாக்குரிமை தந்த ஒரே ஆட்சி இந்தியாவிலேயே சென்னை மாகாண ‘திராவிட மாடல்' ஆட்சிதான்!

கல்வியை ஒடுக்கப்பட்ட சமுதாயத்த வருக்கு அமுதுபோல் ஊட்டிட அரும்பெரும் முயற்சியில் ஈடுபட்டு, வெற்றி கண்ட ஆட்சி ‘திராவிட மாடல்' ஆட்சி.

பொருளாதார, அரசியல் மாற்றங்களை ஓர் ‘அமைதிப் புரட்சியாக' ஆரவாரமின்றி செய்கிறது

அதன் பிறகு, தந்தை பெரியாரின் பெண் ணுரிமை- ஆணுக்குச் சமமான அத்தனை உரிமைகளை தொடர்ச்சியாக 1967 முதல் அமைந்த ‘திராவிட மாடல்' ஆட்சி;  அடுத் தடுத்த கட்ட ஆட்சிகள் அறிஞர் அண்ணா, கலைஞர், இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்வரை தொடர்ந்து ‘திராவிட மாடல்' ஆட்சி - சமூக, பொருளாதார, அரசியல் மாற்றங்களை ஓர் ‘அமைதிப் புரட்சியாக' ஆரவாரமின்றி செய்து உலகத்தாரை வியக்க வைத்து வருகின்றது!

இன்னும் ஒரு செய்தி, ஓர் ஆங்கில நாளேட்டில் வந்துள்ளது!

தாமாகவே நேரடியாக பணிக்குச் சென்று பணியில் உள்ள மகளிர் - பெண்கள் எண் ணிக்கை விகிதாச்சாரத்தில், இந்தியாவின் இதர மாநிலங்களோடு ஒப்பிடுகையில், நமது ‘திராவிட மாடல்' ஆட்சிதான் முதல் இடத் தைத் தட்டிப் பறித்து தகத்தகாய ஒளி வீசும் ஆட்சியாக உள்ளது! பெண் கல்வியைப் பெருக்கியதன் விளைவு - தாக்கம் இது!

மகளிர் கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை - 

சம உரிமை தரும் தமிழ்நாடு!

தமிழ்நாடு ஆட்சிகள் தொடர்ச்சியாக உரிய மகளிர் கல்வி, வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை - சம உரிமை தந்ததினால் - திராவிடர் இயக்க இலட்சிய அடிப்படையில் தமிழ்நாடு தலைமை தாங்குகிறது. 7 லட்சத்து எட்டாயிரத்து இருபத்தாறு பேர் என்ற கணக்குத் தரப்பட்டுள்ளது.

‘குஜராத் மாடல்' என்று தம்பட்டம் அடித்து, ‘‘வளர்ச்சி, வளர்ச்சி'', ‘சப்கா விகாஸ்' என்று முழங்குகிற குஜராத்தில் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?

வெறும் 51,814.

உத்தரப்பிரதேச மாநிலம் - வெறும் 26,053 தான்!

ஏன் பிரபலமான தொழில் வளர்ச்சி பெற்றதாகச் சொல்லப்படும் மகாராட்டிராவில் கூட 78,532 தான்!

மொத்த இந்தியாவின் பல மாநிலங்களின் கூட்டுத் தொகையில், தமிழ்நாட்டில் மட்டும் 50 சதவிகிதத்திற்கு மேற்பட்ட பெண்கள் நேரடியாகச் சென்று பணிபுரியும் நிலை!

பெரியார் சுயமரியாதை இயக்க மாநாட்டுத் தீர்மானங்கள்தானே இந்த வளர்ச்சிக்கு 

மூல வித்து! அடி வேர்

மனுதர்மம் செயல்பட்டிருந்தால் இந்த ‘சாதனை' வந்திருக்குமா? கல்வி, சம உரிமை உத்தியோகத்தில் என்ற பெரியார் சுயமரி யாதை இயக்க மாநாட்டுத் தீர்மானங்கள் தானே இந்த வளர்ச்சிக்கு மூல வித்து! அடி வேர் என்பதை எவரே மறுக்க முடியும்?

‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதுபோல, இது போதாதா?

பழி தூற்றுவோரே, 

படிப்பினை கற்றுத் 

திருந்துவீராக!

உள்ளாட்சியிலும் நல்லாட்சி வழங்கும் இன்றைய தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி பொறுப்புகளில் 50 சதவிகிதத்திற்குமேலும் மகளிர் - பெண்களே ஆட்சி புரியும் வண் ணம் அவர்களை வெற்றி வேட்பாளர்களாக்கி, பொறுப்புகளில் அமர்ந்து, சிறப்பாக ஜனநாய கப் பாடத்தை தாங்களும் கற்று, மற்றவருக்கும் கற்றுக் கொடுக்க கச்சிதமான ஏற்பாடு இந்த ‘திராவிட மாடல்' ஆட்சியில் இல்லாமல் வேறு எந்த ஆட்சியில், எங்கே உள்ளது?

வயிற்றெரிச்சலால் சில காவி காந்தாரி மாடல்களின் கண்கள் இதைப் பார்த்தாவது திறக்கவேண்டும்!

பழி தூற்றுவோரே, படிப்பினை கற்றுத் திருந்துவீராக!


கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

4.7.2022

No comments:

Post a Comment