'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்! இப்படி ஒரு நெருப்பாற்றில் நீந்தி மீண்ட நாளேடு வேறு உண்டா? சிந்திப்பீர், இளைய தலைமுறையினரே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 4, 2022

'விடுதலை’ ஏடு பெற்ற விழுப்புண்கள் - பாரீர்! இப்படி ஒரு நெருப்பாற்றில் நீந்தி மீண்ட நாளேடு வேறு உண்டா? சிந்திப்பீர், இளைய தலைமுறையினரே!

கி.வீரமணி, ஆசிரியர், ‘விடுதலை’

நமது ‘விடுதலை’ நாளேடு, நமது ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் - அவ்வுரிமைகளைப் பெறவும், மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலையாகி, பகுத்தறிவின் பயன்பாட்டால் உலகில் போற்றத்தக்க சமுதாயமாக ஆக வேண்டும் என்பதற்காகவும், எத்த னையோ லட்சம் ரூபாய்கள், பொருள் இழப்பானாலும் கூட, சமுதாயத்திற்கும், மக்களுக்கும் அறிவிலும், மனத் திலும் லாபம் என்பதால், 88 ஆண்டுகள் எதிர்நீச்சல் போட்டு நடைபெற்றுவரும் ஓர் அதிசய நாளேடு!

ஒரு இலட்சிய, கொள்கை நாளேடு - சமூகப் புரட்சிக்கான கருத்தியல் போருக்கான பயணத்தில், இது காகிதம் அல்ல - ஆயுதம் - அறிவாயுதம் என்று உணர்த்தும் வகையில் அது சந்தித்துள்ள எதிர்ப்புகளை, அரசின் அடக்குமுறை காரணமாக விழுப்புண்களையும் ஏற்று வீறுநடை போட்டு வந்துள்ள வரலாற்றுச் சுவடுகளைப் படித்துப் பாருங்கள். அதன் அறிவுப் புரட்சி, அமைதிப் புரட்சி எப்படிப்பட்ட ‘‘விலை’’ கொடுத்து வளர்ந்து வந்திருக்கிறது என்பது புரியும்.

விளையாட்டுக்காக அல்ல இந்த வீர நாளேடு -

வினையாற்றி சமூகத்தை மாற்றுவதற்காகவே!

அனைவரும் சமம், சமத்துவ, சம வாய்ப்பே அதன் இலக்கு; சமூகநீதி  - அதனை அடைய வழி மானமும், அறிவும் பெற்ற மனிதர்களாக மக்களை உருவாக்குதல் என்பதே அதன் குறிக்கோள்.

சமூக, பொருளாதார, அரசியல் பண்பாட்டு விழிப்புணர்வு, மீள் பார்வை, மீட்டெடுக்கவே அதன் பயனுறு பயணம் என்பதைத் தொடங்குகையில் எவ்வளவு சங்கடங்களை, அடக்குமுறை அம்புகளை அதுவும் அந்நாளைய பிரிட்டிஷ் அரசிடமிருந்தும், அது எப்படி சந்தித்து மீண்டுள்ளது என்பதைப் புரிய பழைய நிகழ்வுகளை இங்கே தொகுத்து அளிக்கும் தொடர் இது!

படித்து அறிக, அறிந்து ஆதரவு தருக!

1935 ஆம் ஆண்டுக்குச் செல்வோமா?

அதன் தொடக்கத்திலேயே எப்படிப்பட்ட எதிர்நீச்சல், சோதனை, வழக்கு, தண்டனை, சிறைவாசம் அதன் ஆசிரியர், வெளியிடுவோருக்கு! 

இதயத்தைத் தாக்கும் செய்திகள் - தகவல்கள் அல்லவா இவை?அதேபோல ஈப்போவிலிருந்து வெளிவந்த தமிழன் இதழை வரவேற்று எழுதும் பெரியார். ''தமிழ் மக்களுக்குள் புகுத்தப்பட்டிருக்கும் ஜாதி, மத வித்தியா சங்களையும், பிறவியினால் ஏற்படும் ஏற்றத்தாழ்வு களையும் கண்டித்து, தீண்டாமை, நெருங்காமை, பாராமை முதலிய அட்டூழியங்களை அறவேயழித்து, கலப்புமணம், விதவைமணம், புரோகிதமற்ற மணம். புரோகிதமற்ற ஈமக்கடன் முதலியவைகளை ஆத ரித்து, மக்களின் பகுத்தறிவை வளர்த்து, அவர்கள் முன்னேற்றமடையும்படியான துறைகளில் ஈடுபட்டு ழைத்தலுமாகிய அரிய கொள்கைகளை அடிப்படை யாகக் கொண்டு பாடுபட முன்வந்ததற்காக நாம் அதை முழுமனதுடன் வரவேற்பதுடன், நமது வாசகர் களையும், இப்பத்திரிகைக்கு உடனே சந்தாதாரர்களா கச் சேர்ந்து ஆதரிக்க வேணுமாய் கேட்டுக் கொள்ளு கின்றோம்' (‘குடி அரசு', 01.11.1931) என வேண்டுகோள் விடுக்கிறார்.

தோழமை இதழ்களுக்கு ஆதரவளிக்க வேண்டும், சந்தா செலுத்த வேண்டும், மக்களிடையே அவ்விதழ் களைக் கொண்டுசேர்க்க வேண்டும் என வலியுறுத்தும் பெரியார் தாமும் அவ்விதழ்களுக்கு நிதி அளித்து ஊக்கப் படுத்தியுள்ளார். சுகோதயம் இதழை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தி, 13.12.1925 நாளிட்ட ‘குடிஅரசு' இதழில்,

"வகுப்பு விஷயங்களில் ஒருக்கால் நமக்கும், அதற்கும் அபிப்பிராயபேதம் ஏற்பட்டிருந்தபோதிலும், இராஜீய விஷயங்களில் பெரும்பாலும் மகாத்மாவை யும், சில சமயங்களில் தீவிர ஒத்துழையாத் தத்து வத்தையுமே அனுசரித்து வந்திருக்கிறது. அவ்விதப் பத்திரிகை இது சமயம் சென்னை பிரசிடென்ஸி மாஜிஸ்திரேட் கோர்ட்டுக்கு ஒரு வழக்கில் இழுக்கப்பட்டு பத்திராதிபர்களின் உரிமைக்கும், சுயமரியாதைக்கும் பங்கம் வரத்தக்க மாதிரியில் கஷ்டப்படுத்தப் பட்டு வருகிறது. இதுசமயம் பொறுப்புள்ள பத்திராதிபர்களும், பத்திரிகையின் சுதந்திரத்தில் கவலையுள்ளவர்களும் முன்வந்து, மேற்படி பத்திரிகைக்கு ஆதரவு அளிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையென்பதை நாம் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம். சுகோதயம் பாதுகாப்பு நிதிக்காக நம்மால் கூடிய ஒரு சிறு தொகையாகிய ரூபாய் 10 இன்று அனுப்பியி ருக்கிறதை மேற்படி பத்திராதிபர் அன்புடன் ஏற்றுக் கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம். சுகோதயம் பத்திரிகைக்கு வெற்றி உண்டாகுக" (‘குடி அரசு', 13.12.1925) என வேண்டுகோள் விடுத்துள்ளத னைக் காணமுடிகிறது.

தோழமை இதழ்களை வரவேற்று அவ்விதழ்க ளுக்கு ஆதரவளிக்க வேண்டும், சந்தா செலுத்த வேண்டும், நிதி அளிக்கவேண்டும், கொள்கை இதழ்கள் பெருக வேண்டும், அவ்விதழ்களை மக்கள் வாங்கவேண்டும் என்ற பெரியாரின் இதழியல் அணுகுமுறை என்பது அக்கால இதழியல் வரலாறு காணாத அணுகுமுறையாகும். இன்றைக்கும் கொள்கை சார்ந்த தோழமை இதழ்களை வரவேற்று ஆதரிக்க வேண்டும் என்ற இதழியல் அணுகுமுறை மிக அரிதாகவே காணப்படும் சூழலில் பெரியாரின் வெளிப்படையான எதிர்பார்ப்புகளற்ற தோழமை இதழியல் என்பது இன்றைய இதழாளர்கள் கவனிக்க வேண்டிய கொள்கை நேயமாகும். 

பெரியாரின் கருத்தியல் நோக்குநிலை

பெரியாரின் கொள்கை நிலைப்பாடு சமூக, அரசி யல் அரங்கில் எத்தகையை உறுதித்தன்மை கொண் டதாக இருந்ததோ அதே அளவிலான உறுதிப்பாட் டோடு இதழியல் அரங்கிலும் இருந்தது.

"சாதியும் ஆச்சாரங்களும் மதம் - கடவுள் எனும் மதத்தைச் சுற்றிக் கொண்டிருப்பதால், சாதியை மதத்திலிருந்து பிரித்தெடுக்க முயலுகிறேன். அது முடியாத போது மதத்தையும் சேர்த்தே எதிர்க்க வேண்டியது தவிர்க்க முடியாததாகி விடுகிறது" என்று கூறிய பெரியார், இப்படி எல்லாவற்றையும் நாம் சேர்த்து எதிர்க்கும்போது, உண்மையில் ஏதாவது சத்து இருந் தால் அழியாது என்றார்.

இத்தகையை உறுதிப்பாடும், சிக்கலை ஒருங் கிணைத்து பார்த்து, அதற்கான காரணங்களை ஆராய்ந்து, அதனைத் தீர்ப்பதற்கான வழிகளையும் முன்வைத்தவர் பெரியார் என்பதனால் அவரின் கருத்தியல் நிலைப்பாடு என்பது தீர்வுகளை முன் வைக்கும் தன்மை கொண்டதாக காணப்படுகிறது. பிராமண இதழ்களும், பிராமண இதழாளர்களும் தான் இத்தனை சமூக இழிவுகளுக்கும் காரணம் என்பத னால் அவற்றை அடியோடு வீழ்த்தும் பணியில் பெரியார் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.

பெரியாரின் சமகாலத்தில் ‘சுதேசமித்திரன்', ‘நவசக்தி', ‘விகடன்', ‘தினமணி', ‘மெயில்', ‘சுயராஜ்யா', ‘விஜயா' போன்ற இதழ்கள் வெளிவந்து கொண்டி ருந்தன. அவை பெரியாரையும், அவரது இதழ்களை யும் தாக்குவதையே பெரும் பணியாகக் கொண்டு இயங்கிவந்தன. ஜஸ்டிஸ் கட்சி தொடங்கித் தோழமைக் கருத்தியல் அமைப்புகள் வரையிலான எதிர்க் கருத் தியல் இதழ்களைப் பெரியார் மிகக்கடுமையாகவே விமர்சித்தார். பிராமணரல்லாத இதழ்கள் மக்களுக்கு எதிராய் இருந்தால் அதனையும் கண்டித்துப் பெரியார் எழுதினார். அப்படி 24.04.1927 நாளிட்ட ‘குடி அரசு' இதழில் வெளியான செய்தி ஒன்று

- தொடரும்


No comments:

Post a Comment