ஈ.வெ.கி.ச. இளங்கோவன் கருத்துக் கதிர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 4, 2022

ஈ.வெ.கி.ச. இளங்கோவன் கருத்துக் கதிர்கள்

—பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் நினைத்திருந்தால் அவரின் செல்வத்துக்கும், செல்வாக்குக்கும், படிப்புக்கும் (1942 ஆண்டு வாக்கிலேயே இண்டர் மீடியட் படித்துள்ளார்) அரசியலில் அவர் நுழைந்திருந்தால் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் ஆகி இருக்க லாம். அவற்றை எல்லாம் எதிர்பார்க்காமல் கொண்ட கொள்கைக்காக உறுதியாக நின்று - இன்று நூற்றாண்டும் காண்கிறார். அவர் வாழ்க! வாழ்க!!

— தமிழர் தலைவர் ஆசிரியர் வீரமணி அவர் களின் படிப்புக்கும், தொண்டுக்கும், அனுபவத்துக்கும் அரசியலில் நுழைந்திருந்தால் தமிழ்நாட்டின் முதல் அமைச்சராகவே ஆகி இருப்பார்! வி.பி. சிங் காலத்தில் ஒன்றிய அமைச்சராகவும்கூட ஆகி இருப்பார்.

— மனிதனை மனிதன் சுமக்கும் ஒரு செயல் இங்கு நடக்கிறது - இது ஒரு ஜனநாயக நாடா? ஆட்சியை ஆதரித்தால்கூட ஆசிரியர் வீரமணி அவர்கள்  கொள்கையில் சமரசம் காட்டாமல் கண்டித்தார். மனிதனை மனிதன் இழுக்கும் கை ரிக்ஷாவை ஒழித்தவர் கலைஞர் ஆயிற்றே!

—அரசியலில் நம் காலத்தை வீணடித்து விட் டோமே என்று எனக்குத் தோன்றுகிறது. தந்தை பெரியார் வழியில் சமூக சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டு இருக்கலாம் என்று இப்பொழுது தோன்றுகிறது.

— அன்று இருந்த 'விடுதலை' போல் இப்போது இல்லை. பல வண்ணங்களில் பல்வேறு செய்திகள், உலகத் தகவல்களை எல்லாம் தாங்கி வெளி வருகின்றது. இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக் குறித்துத் தகவல்களைத்  தருகிறது.

வீரத்தோடும், விவேகத்தோடும் வீரமணி நடந்து வருகிறார். 45 நிறுவனங்களை நடத்தி வருகிறார். யார் சொல்லியும் கேட்காமல் இந்த 89ஆம் வயதிலும் ஊர் ஊராகச் சுற்றிப் பிரச்சாரம் செய்கிறார். உலகெங்கும் தந்தை பெரியார் கொள்கைகளைக் கொண்டு சொல் லுகிறார்.

— இன்று உண்மையிலே பொதுக் கூட்டம் போட் டால் இயல்பாக, தானாக வந்து மக்கள் பேச்சுக்களைக் கேட்பது திராவிடர் கழகம் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்குத்தான்.

- பொத்தனூர் க. சண்முகம் நூற்றாண்டு விழாவில் மேனாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான ஈ.வெ.கி.ச. இளங்கோவன்


No comments:

Post a Comment