விழா நாயகர் ஏற்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 4, 2022

விழா நாயகர் ஏற்புரை

திராவிடர் கழகத்தின் தலைமை நிலையமே இங்கு வந்து இருக்கிறது. இதைவிட எனக்கு என்ன பெருமை தேவை?

எனக்கு நடந்த பாராட்டு விழாவாக நான் இதை நினைக்கவில்லை. என்னை வைத்து நடத்தப்பட்ட கொள்கைப் பிரச்சார விழாவாகத்தான் கருது கிறேன்.

எனக்கு இது போனஸ் வாழ்க்கை! நான் மறைந்தால் யாரும் மாலை மலர் வளையம் வைக்க வேண்டாம். 

மறைந்த டார்பிடோ ஏ.பி. ஜனார்த்தனம் அவர்களின் வாழ்விணையர் மனோ ரஞ்சிதம் அம்மையார் சொல்லிச் சென்றது போல் (அதன்படியே அவர் உடல் பெரியார் திடலில் வைக்கப்பட்டு, பக்கத்தில் உண்டியலும் வைக்கப்பட்டது) என் உடலுக்குப் பக்கத்திலும் ஓர் உண்டியல் வைத்து மலர் மாலைக்குப் பதிலாக செலவின் தொகையை அந்த உண்டியலில் போட்டால், அதுபயனுள்ள நல்ல செயல்களுக்குப் பயன்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்த வூரில் எங்கள் குடும்பத்தின் சார்பில் 15 லட்சம் ரூபாய் மதிப்பில் பெரியார் படிப்பகமும்,  ஆசிரியர் வீரமணி நூலகமும் இன்று திறக்கப் பட்டது. அதற்கான சாசனப் பத்திரத்தை ஆசிரியர் அவர்களிடம் இந்நிகழ்ச்சியில் அளிக்கிறேன்.

என் நூற்றாண்டையொட்டி ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என்று கணக்கிட்டு நூறு ஆண்டுக்கான ஒரு லட்சம் ரூபாய் (காசோலையை) எனக்கு அளித்திட கழகத்தின் பொதுக்குழு உறுப்பினர் பழநி. புள்ளையண்ணன்   விரும்பினார்.

நான் அவரிடம் சொன்னேன் அந்தத் தொகையைத் தனிப்பட்ட எனக்கு அளிக்க வேண்டாம். பெரியார் உலகுக்கு என் மூலம் அளித்து  விடுகிறேன் என்று அவரிடம் சொன்னேன்; அவரும்  பெரு மனதோடு அதை  ஏற்றுக் கொண் டார். அதற்கான காசோலையை ஆசிரியர் அவர் களிடம் இப்பொழுது அளிக்கிறேன்.

-விழா நாயகர் பொத்தனூர் க. சண்முகம் ஏற்புரையில் 3.7.2022


No comments:

Post a Comment