கோவிட் பெருந்தொற்று காலத்திற்கு பிறகு பெண்கள் வேலைக்குச் செல்வது அதிகரித்துள்ளது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, July 23, 2022

கோவிட் பெருந்தொற்று காலத்திற்கு பிறகு பெண்கள் வேலைக்குச் செல்வது அதிகரித்துள்ளது

அண்மையில் ’ Avtar’s 2022 Status of Women’s Workforce Participation  என்கிற  ஆய்வறிக்கை ஒன்றை  பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அமைப்பு சமர்ப்பித்துள்ளது. அந்த அறிக்கையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாகப் பெண்கள் வேலைக்குப் போய்க் கொண்டிருந்த நிலையை ஒப்பிடும்போது, தற்போது ஏராளமான பெண்கள் வேலைக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். 2016ஆம் ஆண்டில் வேலை தேடிய பெண்களின் எண்ணிக்கை 5.7 கோடியாக இருந்திருக்கிறது. அது நடப்பு 2022-இல் 7.6 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2015 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் உயர்கல்வி படிப்புகளில் பெண் மாணவர்களின் சேர்க்கை 18.2% வளர்ச்சியைக் கண்டுள்ளது. நிச்சயமாக இந்நிலை பெண்களின் திறமையை மேம்படுத்தும். ஆலோசனை (கன்சல்டிங்), தகவல் தொழில்நுட்பம் மற்றும் அது சார்ந்த பணிகள் (அய்.டி - அய்.டி.இ.எஸ்) மற்றும் நிதிச் சேவை (பி.எஃப்.எஸ்.அய்) ஆகியவை 2020ஆம் ஆண்டில் பெண் திறமையாளர்களைப் பணியமர்த்தும் முதல் மூன்று துறைகளாக இருக்கும். கரோனா தொற்றுக்குப் பிறகு வீட்டிலிருந்து வேலை (வொர்க் ஃப்ரம் ஹோம்) மாதிரியான சில அலுவலகக் கட்டமைப்புகள் மற்றும் அலுவலக கலாசார மாற்றங்கள் பெண்கள் வேலைக்குச் செல்வதை அதிகப்படுத்தியிருக்கிறது. நடப்பு 2020ஆம் ஆண்டில் 3.8 லட்சம் நிறுவனங்கள் வொர்க் ப்ரம் ஹோம் வசதியை அதன் ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. இது, 2016ஆம் ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாகும். அந்த ஆண்டில் அய்.டி துறை சார்ந்த ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்கிக் கொண்டிருந்தன.

ஆனால், இன்று பெரும்பாலான துறை சார்ந்த நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பை வழங்குவதால், பெண்களுக்கு இந்த வசதி பொருத்தமானதாக இருக்கிறது. சுமார் 12 லட்சம் நகர்ப்புற பெண்கள் வீட்டில் இருந்து வேலை என்கிற வசதியின் மூலம் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.

கரோனா தொற்று காரணமாகப் பல நிறுவனங்கள் வீட்டில் இருந்து வேலை செய்வதை ஊக்குவிப்பதால் அது பெண்கள் வேலையில் இருந்து விலகுவதை குறைத்திருக்கிறது. 

அதுமட்டுமல்லாமல், வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்புகளை வழங்குவதால், வேலைக்குச் செல்லும் ஆர்வத்தை அது தூண்டவும் செய்கிறது.  மேலும், தன் ஊழியர்களின் குழந்தை வளர்ப்புக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நிறுவனங்களின்  எண்ணிக்கையும் தற்போது அதிகரித்திருக்கிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் குழந்தை பராமரிப்பு ஆதரவை வழங்கும் நிறுவனங்களின் எண்ணிக்கை 2016இல் 165-ஆக இருந்தது. 

இது நடப்பு ஆண்டில் 581 ஆக அதிகரித்துள்ளது. கோவிட்-19 தொற்றுக்குப் பின், சிறந்த குழந்தை பராமரிப்புக்கான அவசியத்தை அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்கள் புரிந்து கொண்டுள்ளன. வீட்டுக்கு அருகிலும், அலுவலக வளாகத்துக்கு உள்ளும் குழந்தைகள் காப்பகங்கள் அமைப்பது மற்றும் வீட்டில் இருந்து குழந்தைகளைப் பராமரிப்பதற்கான திட்டங்களை இனி வரும் ஆண்டுகளில் பல்வேறு நிறுவனங்கள் செயல்படுத்தும்”    இதிலும் தமிழ்நாட்டில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து வசதிகள் இருப்பதால் தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை ஓராண்டில் மிகவும் அதிகமாகி உள்ளது.

No comments:

Post a Comment