ராமன் பாலம் தேசிய சின்னமா? உச்சநீதிமன்றம் விசாரணை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

ராமன் பாலம் தேசிய சின்னமா? உச்சநீதிமன்றம் விசாரணை

புதுடில்லி, ஜூலை 14-' ராமன் சேது பாலத்தை தேசிய நினைவுச் சின்ன மாக அறிவிக்க கோரிய மனுவை வரும் 26ஆ-ம் தேதி உச்சநீதிமன்றத் தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளதாக தகவல் கள் தெரிவிக்கின்றன.

இந்தியா -- இலங்கை இடையே கடல் வழி வர்த்தகம், போக்குவ ரத்தை மேம்படுத்தும் வகையில் வங்கக் கடலில் சேது சமுத்திரத் திட்டத்தை செயல்படுத்த காங் கிரஸ் தலைமையிலான முந்தைய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசு திட்டமிட்டது.

இந்த வழித்தடத்தில், கடலுக்கு அடியில், ராமன் பாலம் இருப்பதா கக் கூறி, இத்திட்டத்தை எதிர்த்து கடந்த 2007இல் பா.ஜ., -- மூத்த தலை வர் சுப்ரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். அதில் 'ராமன் பாலத்தை இடித்தோ அதற்கு சேதம் விளை விக்கும் வகையிலோ, எந்த திட்டத் தையும் செயல்படுத்தக் கூடாது' என அவர் வாதிட்டார். கடந்த பிப் ரவரி மாதம் விசாரணைக்கு வந்த போது மார்ச் 9இல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் ராமன் சேது பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என 2020இல் இன் னொரு மனு தாக்கல் செய்தார். கரோனா தொற்று பரவல் காரண மாக, நீதிமன்ற நடவடிக்கைகள், 'காணொலி' வாயிலாக நடந்தன.

இந்த மனு பல ஆண்டு களாக நிலுவையில் இருந்த நிலையில். இதை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்' என சுப்ரமணியன் சுவாமி தரப்பில் உச்ச நீதி மன்றத்தில் கோரப்பட்டது. இதையடுத்து, 'இந்த மனு வரும் 26இ-ல் மீண்டும் விசாரணைக்கு எடுத் துக் கொள்ளப்படும்' என, தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு உத்தர விட்டது.

No comments:

Post a Comment