நாடெங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, July 14, 2022

நாடெங்கும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசம்

புதுடில்லி, ஜூலை 14- நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, நாளை முதல் 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக் கையின் ஒருபகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணி, கடந்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி தொடங்கியது. ஒன்றிய, மாநில அரசுகள் சார்பில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு இலவசமாக 2 தவணையாக தடுப்பூசி செலுத்தப் பட்டது. தற்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப் பூசி செலுத்தப்படுகிறது.

நாடுமுழுவதும் இதுவரை 199.12 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. மொத்த மக்கள் தொகையில் தற்போது 96 சதவீதம் பேர் முதல் டோஸ் தடுப் பூசியும், 87 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் செலுத் திக் கொண்டுள்ளனர்

இதுமட்டுமின்றி, 18 வயதுக்கு மேற் பட்டவர்களில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்வது நல்லது என ஒன்றிய அரசு தெரிவித்தது. 2ஆவது டோஸ் போடப்பட்டு 9 மாதங் களுக்குப் பிறகு பூஸ்டர் போடப் படுகிறது. முதல்கட்டமாக மருத் துவ ஊழியர்கள், முன்களப் பணி யாளர்கள், மூத்த குடிமக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்பட்டு வருகிறது. இவர் களில் 16 கோடி பேர் பூஸ்டர் தடுப் பூசி செலுத்தியுள்ளனர்.

மேலும், 18 வயதுக்கு மேற்பட்ட மற்றவர்கள் பூஸ்டர் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளில் பணம் கொடுத்து செலுத்திக் கொள் ளலாம் என முன்பு தெரிவிக்கப் பட்டிருந்தது. ஆனால், நாட்டில் 18 முதல் 59 வயதுக்கு உட்பட்ட 77 கோடி பேரில் ஒரு சதவீதத்தினருக் கும் குறைவாகவே பூஸ்டர் தடுப் பூசி செலுத்தியுள்ளனர். இதனால், கரோனா பூஸ்டர் தடுப்பூசிகளை அனைவருக்கும் இலவசமாக போட அனுமதிக்க வேண்டும் என ஒன்றிய அரசிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்த ஒன்றிய அரசு அனுமதித்துள்ளது.

நாட்டின் 75ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு, 18 வயதுக்கு மேற்பட்ட வர்களுக்கு ஜூலை 15 (நாளை) முதல் 75 நாட்களுக்கு அரசு மருத் துவமனை மற்றும் மய்யங்களில் கரோனா பூஸ்டர் தடுப்பூசி இல வசமாக போடப்படும் என ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார்.

பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கான கால இடை வெளி, 9 மாதங்களில் இருந்து 6 மாதங்களாக அண்மையில் குறைக் கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment