ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, July 24, 2022

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

மிகுந்த வேதனையுடன் தான் பட்நாவிசுக்கு பதிலாக ஏக்நாத் சிண்டேவை முதல்வராக்கினோம், மகாராட்டிரா மாநில பாஜக தலைவர் சந்திரகாந்த் படேல் புலம்பல்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

பாஜக தலைமையிலான என்.டி.ஏ. அரசு, எந்தப் பொறுப்பும் இல்லாத எந்த தகவலும் அளிக்காத  அரசு என ராகுல் காந்தி காட்டம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் புறக்கணிப்பு முடிவை மாற்ற மம்தாவுக்கு அவகாசம் உள்ளது: மார்க்கரெட் ஆல்வா பேச்சு

தி டெலிகிராப்:

சுதந்திர தினத்தில் கொடியேற்ற மாணவர்களிடம் இருந்து ரூ.20 பெற வேண்டும் என்ற காஷ்மீர் அரசின் உத்தரவு கடும் எதிர்ப்பு காரணமாக திரும்பப் பெறப்பட்டது.

கோவாவில் இறந்தவரின் பெயரில் உரிமம் பெற்று சட்ட விரோத மது பார் நடத்தும் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இராணி மகள்: அமைச்சர் பதவியை பறிக்க காங். வலியுறுத்தல்

விசாரணை என்ற பெயரில் ஊடகங்களால் நடத்தப்படும் கட்டப்பஞ்சாயத்துகளால் ஜனநாயகத் துக்கு ஆபத்து: தலைமை நீதிபதி ரமணா பரபரப்பு பேச்சு

- குடந்தை கருணா


No comments:

Post a Comment