செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, July 8, 2022

செய்தியும், சிந்தனையும்....!

பூனைக்குட்டி வெளியில் வந்தது

* புதிய கல்விக் கொள்கை - சமஸ்கிருதம் உள்ளிட்ட தொன்மை மொழிகளின் வளர்ச்சியை மேம்படுத்தும். 

- பிரதமர் மோடி

>> புரிகிறதா, புதிய கல்விக் கொள்கையின் புதிய முகமூடி?

நேர் எதிரான...

* தமிழகத்திலும் தயாராகிறார் ஏக்நாத் ஷிண்டே! 

- அண்ணாமலை, பி.ஜே.பி.

>> தமிழ்நாட்டில் பிறந்தும், திராவிட இயக்கத்தின் சமூகநீதிக் கொள்கையால் படித்துப் பட்டம் பெற்றும் - அதற்கு நேர் எதிரான குலக்கல்வி பி.ஜே.பி.,க்குச் சேவகம் செய்யப் புறப்பட்டவர் அல்லவா! இப்படித் தான் பேசுவார்கள்.

கல் முதலாளி

* திருப்பதியில் ஒரே நாளில் ரூ.6.19 கோடி உண்டியல் காணிக்கை.

>> ஏழுமலையான் கல்யாணத்துக்குக் குபேரனிடம் வாங்கிய கடன் இன்னும் அடையவில்லையா? ரொம்பவும் காஸ்ட்லியான கல்யாணமோ!

No comments:

Post a Comment