40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 20, 2022

40 நாள்களில் 60ஆயிரம் ‘விடுதலை’ களத்தில் கருஞ்சட்டை களப்பணித் தோழர்கள்!

தமிழர் தலைவரிடம் விடுதலை சந்தா

திராவிட இயக்கத் தமிழர் பேரவை வெற்றிச்செல்வன் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர் சோ.சிவசந்திரன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை ஆண்டு சந்தாக்களை வழங்கினர்.

----------------------------------------

தாம்பரம் மாவட்டம் சார்பில் விடுதலை சந்தா சேர்ப்பு பணி
16.7.2022  மாலை தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் அமைந்துள்ள பெரியார் பகுத்தறிவு புத்தக கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்திற்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் வருகை தந்து சிறப்பித்தார். அவரிடம் தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப.முத்தையன் விடுதலை அரையாண்டு சந்தா 5, மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன் அரையாண்டு சந்தா 10, திராவிட தொழிலாளா கழகம் கூடுவாஞ்சேரி மா.இராசு அரையாண்டு சந்தா 5,தாம்பரம் நகர தலைவர் சீ.லட்சுமிபதி ஆண்டு சந்தா 3 மற்றும் அரையாண்டு சந்தா 8  வழங்கினார்கள் மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், சென்னை மண்டல கழக செயலாளர் தெ.சே.கோபால், சோழிங்கநல்லூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் விடுதலை நகர் பி.சி ஜெயராமன்,தாம்பரம் நகர செயலாளர் சு.மோகன்ராஜ் மற்றும் நகர துணைச் செயலாளர் மா.குணசேகரன் ஆகியோர் உடனிருந்தனர்.
----------------------------------------
கழக மகளிர் பாசறை மாநில செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து 9 ஆண்டு சந்தாக்கள் மற்றும் 1 அரை ஆண்டு  சந்தாக்கள் என மொத்தம் ரூ.17,100 வழங்கினார். உடன் சென்னை வடக்கு மாவட்ட தி.மு.க. அய்.டி. அமைப்பின் துணை ஒருங் கிணைப்பாளர் பா. ஆனந்தி மற்றும் க. அருண். (19.7.2022, பெரியார் திடல்)
----------------------------------------
கடலூர் மாவட்டம் சார்பில் குறிஞ்சிப்பாடியில் விடுதலை சந்தா சேர்ப்பு பணி
குறிஞ்சிப்பாடியில் ஆசிரியர் சீனிவாசன், ஆசிரியர் விஸ்வநாதன், ஆசிரியர் பெரியார் செல்வம், ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோரிடம் விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் பெற்றார்.
----------------------------------------
தூத்துக்குடி, கன்னியாகுமரி , நெல்லை மாவட்டங்கள் சார்பில் விடுதலை சந்தா சேர்ப்பு பணி
மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரனிடம் நெல்லை மண்டல கழகத் தலைவர் சு. காசிராசன் ஏழு ஆண்டு விடுதலைச் சந்தா வழங்கினார், நெல்லை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் திருமாவளவன் ஓராண்டு விடுதலைச் சந்தா வழங்கினார், நெல்லை மாவட்ட கழக தலைவர் இரா.காசி ஆறு மாத விடுதலைச் சந்தா வழங்கினார், சேரன்மாதேவி ஒன்றிய கழக செயலாளர்கோ. சேகர் இரண்டு ஆண்டு விடுதலைச் சந்தா வழங்கினார், நெல்லை மாவட்ட கழக துணைத் தலைவர் ச. இராசேந்திரன் இரண்டு ஆறு மாத விடுதலைச் சந்தாக்களை வழங்கினார், நெல்லைமாவட்ட கழக அமைப்பாளர் வள்ளியூர் ந. குணசீலன் ஓராண்டு விடுதலைச் சந்தா வழங்கினார், தூத்துக்குடி புதுக்கோட்டை கழக பொறுப்பாளர் கோ. முருகன் ஓராண்டு விடுதலைச் சந்தா வழங்கியதுடன், 10 சந்தா ரசீது பெற்றுக் கொண்டார். கன்னியாகுமரி மாவட்ட கழக தலைவர் எம்.எம். சுப்பிரமணியன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார், நாகர்கோவில் மாநகர கழக துணைச் செயலாளர் கவிஞர் செய்க் முகம்மது 10 விடுதலை சந்தா இரசீது பெற்றுக் கொண்டார்.  கழகப் பொதுக்குழு உறுப்பினர் ஆரல்வாய்மொழி மணி பத்து விடுதலைச் சந்தா ரசீது பெற்றுக் கொண்டார். 

மாநில அமைப்பாளர் உரத்தநாடு குணசேகரனிடம் தூத்துக்குடி திமுக இலக்கிய அணி பொறுப்பாளர் மோ. அன்பழகன் 10 விடுதலை சந்தா ரசீது பெற்றுக் கொண்டார். தூத்துக்குடி பகுத்தறிவாளர் மாணவர்களுக்கு கே.டி.சி .கோபால்சாமி ஓராண்டு விடுதலைச் சந்தா வழங்கினார். திருநெல்வேலி மாவட்ட கழக செயலாளர் இரா.வேல்முருகன் ஏழு விடுதலைச் சந்தா வழங்கினார்.நெல்லை மாவட்ட திராவிட இயக்க தமிழர் பேரவை பொறுப்பாளர் பாபு ஓராண்டு விடுதலைச் சந்தா வழங்கினார். கன்னியாகுமரி மாவட்ட கழக இளைஞரணி தலைவர் இரா.இராசேசு பத்து விடுதலை சந்தா ரசீதை பெற்றுக் கொண்டார். கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் கோ. வெற்றி வேந்தன் ஓராண்டு விடுதலை சந்தா வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட கழக செயலாளர்மு. முனியசாமி ஆறு ஆண்டு விடுதலைச் சந்தா வழங்கினார். தூத்துக்குடி மாவட்ட கழக தலைவர் பால். இராசேந்திரம் ஆறு ஆண்டு விடுதலைச் சந்தா வழங்கினார். கன்னியாகுமரி மாவட்ட கழகத் துணைத் தலைவர் நல்லப்பெருமாள் 10 விடுதலை சந்தா இரசீது பெற்றுக் கொண்டார்.
----------------------------------------
கோபி, தாராபுரம் மாவட்டங்கள் சார்பில் விடுதலை சந்தா சேர்ப்பு பணி
கோபிச்செட்டிப்பாளையம் மாவட்டத்தில் 18-07-2022 அன்று மாவட்டத் தலைவர் சிவலிங்கம் தலைமையில், மாவட்டசெயலாளர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், மண்டல செயலாளர் ராஜமாணிக்கம், பொன்.முகிலன்,ஆகியோர் முன்னிலையில் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் ந.சிவலிங்கம் வசம் 100 விடுதலை சந்தாவுக்கான ரசீது புத்தகம் ஒப்படைக்கப்பட்டது, தாராபுரம் மாவட்டத்தில் 18-07-2022 அன்று மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில், மாவட்டத் துணைத்தலைவர் தலைவர் முத்து, முருகேசன், மாவட்ட  செயலாளர் சண்முகம், மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் தங்கவேல், நத்தக்காடையூர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் காங்கேயம் புரட்சிகர இளைஞர் முன்னனி பொறுப்பாளர் கவின் 5 ஆண்டு விடுதலை சந்தாவை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம்வழங்கினார். தாராபுரம் கழக மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன் 10ஆண்டு விடுதலை சந்தாவைப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார். தாராபுரம் கழக மாவட்டச் செயலாளர் சண்முகம் முதல் தவணையாக விடுதலை சந்தாக்களை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார், 


தாராபுரம் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில், மாவட்டத் துணைத்தலைவர் தலைவர் முத்து. முருகேசன், மாவட்ட  செயலாளர் சண்முகம், மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் தங்கவேல், நத்தக்காடையூர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் தாராபுரம் கழக மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன் 10ஆண்டு விடுதலை சந்தாக்கள், தாராபுரம் மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமையில், மாவட்டத் துணைத்தலைவர் தலைவர் முத்து. முருகேசன் மாவட்ட  செயலாளர் சண்முகம், மடத்துக்குளம் ஒன்றிய தலைவர் தங்கவேல், நத்தக்காடையூர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் தாராபுரம் கழக மாவட்டம் சார்பில் சண்முகம் முதல் தவணையாக விடுதலை சந்தா ரூ 54,000 கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார்கள். 
----------------------------------------
தென்காசி மாவட்டம் திமுக மாவட்ட செயலாளார் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் பத்து விடுதலை ஆண்டு சந்தா மாநில திராவிடர் கழக அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் கொடுத்தார்.
----------------------------------------
திமுக மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர்  இரா. நரேந்திரன், மாநில மகளிர் பாசறை செயலாளர் பா.மணியம்மையிடம் ஓர் ஆண்டிற்கான விடுதலை நாளேடு சந்தாவை வழங்கினார். உடன் திமுக அய்.டி விங் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பா.ஆனந்தி.







No comments:

Post a Comment